ஆர்ப்பாட்டம் நடத்திய செவிலியர்கள்: நேரில் வந்து கலெக்டர் செய்த காரியம்

ஆர்ப்பாட்டம் நடத்திய செவிலியர்கள்: நேரில் வந்து கலெக்டர் செய்த காரியம்
X

தேனி கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்திய கிராம சுகாதார செவிலியர்களிடம்,  கலெக்டர் முரளீதரன் நேரில் வந்து மனு வாங்கினார்.

தேனி கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய செவிலியர்களிடம், கலெக்டர் நேரில் வந்து மனு வாங்கி, அவர்களது குறைகளை தீர்ப்பதாக உறுதி அளித்தார்.

தேனி மாவட்டத்தில் உள்ள கிராம சுகாதார செவிலியர்கள், கலெக்டர் அலுவலகம் முன்பு பலமுறை ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அதேபோல் இன்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தகவல் அறிந்த கலெக்டர் முரளீதரன், தனது அறையில் இருந்து இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்திய செவிலியர்களிடம் சென்றார்.

திடீரென கலெக்டர் வந்ததை எதிர்பார்க்காத செவிலியர்கள், தங்கள் கோஷத்தை நிறுத்தி அமைதியாகினர். அவர்களிடம் பேசிய கலெக்டர், 'உங்கள் பிரச்னை என்ன என்று கேட்டார்?. அதற்கு செவிலியர்கள், கொரோனா காலம் தொடங்கியது முதலே, தங்களது பணிச்சுமை நான்கு மடங்கு அதிகரித்து விட்டது.

சுகாதாரத்துறை அதிகாரிகள், ஏதாவது குறை கண்டுபிடித்து எங்கள் மீது துறைரீதியாக கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் நாங்கள் கடும் மன உளைச்சலில் இருக்கிறோம். துறைரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கும் முன்னர் அதற்கான காரணம் குறித்து விளக்கம் கேட்க வேண்டும். தவறு இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதைக்கேட்ட கலெக்டர், அவர்களிடம் மனு பெற்றுக்கொண்டு, பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண்பதாக உறுதியளித்தார். இதனால் ஆர்ப்பாட்டம் நடத்திய செவிலியர்கள், மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!