பெரியகுளம் நகராட்சியில் நமக்கு நாமே திட்ட ஆலோசனை கூட்டம்

பெரியகுளம் நகராட்சியில்  நமக்கு நாமே  திட்ட ஆலோசனை கூட்டம்
X

பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நமக்கு நாமே திட்ட ஆலோசனை கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

நமக்கு நாமே திட்டத்தில் பெரியகுளம் நகராட்சியில் பல்வேறு திட்டப்பணிகளை நிறைவேற்ற இந்தக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது

தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சியில் நமக்கு நாமே திட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, பெரியகுளம் எம்.எல்.ஏ. சரணவக்குமார் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் பாலமுருகன், மற்றும் நகராட்சி அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

பெரியகுளம் பஸ்ஸ்டாண்ட் பகுதியில் ரவுண்டானா அமைப்பது, அம்பேத்கர் சிலையில் இருந்து, பசும்பொன்தேவர் சிலை வரை ஹாலோபிளாக் நடைபாதை அமைப்பது, பழைய பஸ்ஸ்டாண்டை ஆம்னி பஸ்ஸ்டாண்ட் ஆக மாற்றுவது, வராக நதியை சுத்தப்படுத்துவது, நிரந்தர வாரச்சந்தை அமைப்பது, புதிய பஸ்ஸ்டாண்டினை இடம் மாற்றுவது, மின் மயானத்தை சரி செய்வது, கல்லறைகள் கட்டுவதை தடை செய்வது உட்பட பல்வேறு பணிகள் நமக்கு நாமே திட்டத்தில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. பெரியகுளம் நகர் நலச்சங்கம், தன்னார்வலர்கள், பெரியகுளம் விளையாட்டு மைய நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், வங்கி அதிகாரிகள், நகராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai healthcare products