தேனியில் கொராேனா கட்டுப்பாடுகள் தீவிரம்: மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் சினிமா பார்க்க முடியாது. பல டாஸ்மாக் கடைகளிலும் சரக்கு வாங்க முடியாது. பொதுஇடங்களில் மாஸ்க் இல்லாவிட்டால் 500 ரூபாய் அபராதம் என கடும் நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
ஓமிக்ரான் வைரஸ் பரவல் பற்றி இதுவரை மத்திய, மாநில அரசுகளுக்கு தெளிவான தகவல் இல்லை. ஆனால் ஒமிக்ரான் அதிக வேகத்தில் பரவும் என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஒமிக்ரான் வைரசால் ஒரு உயிரிழப்பு கூட உறுதிப்படுத்தப்படவில்லை.
தற்போது கிடைத்த தகவல்கள் அடிப்படையில் ஒமிக்ரான் பாதித்தால் மருத்துவச்சிகிச்சை பெற்று குணமடையலாம் என்பதும், அது அதிக வேகமாக பரவும் என்பதும், சாதாரண கொரோனா வைரஸ் காற்றில் 6 மீட்டர் வரை பயணித்தால், ஒமிக்ரான் 12 முதல் 18 மீட்டர் வரை பயணிக்கும். சாதாரண கொரோனா வைரசை விட ஒமிக்ரான் பரவும் வேகம் 10 மடங்கு அதிகமாக இருக்கலாம் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தடுப்பூசி பாதுகாக்குமா? இல்லையா? என்ற விவரங்கள் எதுவும் அரசிடம் இல்லை. இதனால் தற்போது இருக்கும் ஒரே வழி தற்பாதுகாப்பு மட்டுமே. இதற்கு ஒரே வழி தடுப்பூசி போடுவதும், மாஸ்க் அணிவது மட்டுமே. இதனால் பரவல் தொடங்கினால் கட்டுப்படுத்த முடியாது என்பதால், பரவலை தடுப்பதில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக உள்ளன. இதனால் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் தடுப்பூசி போடாதவர்களையும், தடுப்பூசி போட்டாலும் மாஸ்க் அணியாதவர்களையும் தியேட்டருக்குள் அனுமதித்தால் தியேட்டர் சீல் வைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. உழவர்சந்தை, பஜார், பொதுஇடங்கள் எதுவாக இருந்தாலும், மாஸ்க் இல்லாமல் வெளியில் வருபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் அத்தனை பேரும் அபராதம் வசூலிக்கும் புத்தகத்துடன் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் கடும் மாவட்ட நிர்வாகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu