பெரியகுளம் அருகே மின்வாரிய ஊழியர்கள் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

புதிய மின்சார திருத்தச் சட்டத்தைக் கொண்டு வரும் மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்து பெரியகுளம் கோட்டம் ஜெயமங்கலம் பிரிவு அலுவலக மின் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தமிழ்நாடு மின் வாரிய தொழிற் சங்க கூட்டமைப்பு சார்பாக பெரியகுளம் கோட்டம் ஜெயமங்கலம் பிரிவு அலுவலகத்தில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. எல்.பி.எப்., நிர்வாகி செல்வக்குமார் தலைமை வகித்தார். நிர்வாகிகள் மாரிமுத்து, முபாரக், பாண்டி உட்பட ஏராளமான மின்துறை பங்கேற்றனர்.
மாநில உரிமைகளை முழுமையாகப் பறிக்கும் விதத்திலும் பொதுப்பட்டியலில் உள்ள மின்சாரம் தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசே அபகரித்துக் கொள்ளும் உள்நோக்கத்துடனும் 2020 ம் ஆண்டு புதிய மின்சார திருத்தச் சட்டத்தைக் கொண்டு வரும் மத்திய அரசுக்கு கண்டனத்தைத் தெரிவித்தும்,அரசைக் கண்டித்து
2014, 2018 ஆகிய ஆண்டுகளில் முயற்சி செய்து தோற்றுப் போன இந்தத் திருத்தச் சட்டத்தை, மாநிலங்கள் எல்லாம் கொரோனா நோய்த் தொற்று பேரிடரைச் சமாளிக்கும் உயிர்காக்கும் முயற்சியில் தீவிரமாகப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், கொண்டு வந்து கருத்துக் கேட்பது மிகுந்த கவலையளிக்கிறது.
கொரோனாவிலிருந்து மனித உயிர்களைக் காக்கும் முயற்சிகள் குறித்தோ, ஸ்தம்பித்து மூச்சுத் திணறி - ஊசலாடிக் கொண்டிருக்கும் நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றியோ, கிஞ்சித்தும் கவலைப்படாமல் அதிகாரப் பசியில் இப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்றிட மத்திய அரசு முயற்சிப்பது சுமூகமான மத்திய - மாநில உறவுகளை அடியோடு வெறுக்கும் செயல் என்றும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கமிட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu