/* */

சாதனை படைத்த போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு விழா

தேனி மாவட்டத்தில் சாதனை படைத்த போலீஸ் அதிகாரிகளுக்கும், அவர்களது குழுவினருக்கும் திண்டுக்கல் டி.ஐ.ஜி., பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.

HIGHLIGHTS

சாதனை படைத்த போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு விழா
X

நண்பரை கொலை செய்து கிணற்றில் வீசிய ஆறு பேர் கொண்ட கும்பலை கைது செய்த பெரியகுளம் டி.எஸ்.பி., முத்துக்குமாருக்கு, திண்டுக்கல் டி.ஐ.ஜி., விஜயகுமாரி பாராட்டு சான்றிதழ் வழங்கினார். உடன் தேனி எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரே.

தேனி எஸ்.பி., அலுவலகத்தில், கடந்த இரண்டு மாதங்களில் சாதனை படைத்த போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. திண்டுக்கல் டி.ஐ.ஜி., விஜயகுமாரி தலைமை வகித்தார். தேனி எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே முன்னிலை வகித்தார்.

நண்பரை கொலை செய்து கிணற்றில் வீசிய கும்பலை கைது செய்த பெரியகுளம் டி.எஸ்.பி., முத்துக்குமார் தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் குழு, வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்து டெல்லியில் பதுங்கியிருந்த கும்பலை கைது செய்த போடி இன்ஸ்பெக்டர் சரவணன், வக்கீல் கொலை வழக்கில் தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்த உத்தமபாளையம் எஸ்.ஐ., திவான்மைதீன் தலைமையிலான குழுவினர், 80 கிலோவிற்குள் அதிகமான கஞ்சாவை பிடித்து, கம்பம் பகுதியில் கஞ்சா விற்பனையை கட்டுக்குள் கொண்டு வந்த இன்ஸ்பெக்டர் புவனேஷ்வரி தலைமையிலான குழுவினரை, பாராட்டி டி.ஐ.ஜி., சான்றிதழ்கள் வழங்கினார்.

Updated On: 21 Oct 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  5. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  6. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  9. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?