பெரியகுளத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெரியகுளத்தில் ஊர்வலம் சென்ற பா.ஜ,வினர்.
பெரியகுளம் வடுகபட்டியில் கோயில், பள்ளி, நுாலகம், வணிக வளாகங்கள் இருக்கும் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இதனால் இப்பகுதியில் குடிமகன்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
இந்த கடையை அகற்றக்கோரி பலமுறை மனு கொடுத்தும் பலனில்லை. இதனால் பா.ஜ., நிர்வாகிகள், வணிகர்கள், வெற்றிலை விவசாயிகள் இணைந்து இந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, டாஸ்மாக் உதவி மேலாளர் மீனாட்சி, பெரியகுளம் தாசில்தார் ராணி, டி.எஸ்.பி., முத்துக்குமார், ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுடன் நடத்திய பேச்சு நடத்தி அடுத்த, 30 நாட்களுக்குள் டாஸ்மாக் கடையை இடம் மாற்றம் செய்வதாக உறுதி அளித்தனர். அதன் பின்னர் ஆர்ப்பாட்டம் வாபஸ் பெறப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu