துப்புரவு பணியாளர்களுக்கு பிரியாணி வழங்கிய முன்னாள் ராணுவவீரர்கள்

துப்புரவு பணியாளர்களுக்கு பிரியாணி  வழங்கிய முன்னாள் ராணுவவீரர்கள்
X

தேசிய முன்னாள் ராணுவவீரர்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் மாநில தலைவர் சுபேதார் மகாராஜன், துப்புரவு பணியாளர்களுக்கு முட்டை பிரியாணி வழங்கினார்.

தேனி பழனிசெட்டிபட்டியில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழாவை, முன்னிட்டு துப்புரவு பணியாளர்களுக்கு முட்டை பிரியாணி வழங்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாளை, தேனி பழனிசெட்டிபட்டியில் கொண்டாடிய தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு முட்டை பிரியாணி வழங்கப்பட்டது. இதையொட்டி இன்று, முன்னாள் ராணுவவீரர்கள் ஒருங்கிணைப்புக்குழுவுடன், தேனி சமூக நல்லிணக்க பேரவை, சம்மட்டி சமூக நல அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் இணைந்து கொண்டாடினர்.

பேராசிரியர் ஜோசப்சேவியர் தலைமை வகித்தார். சம்மட்டி நாகராஜன் தலைமை வகித்தார். தேனி வட்டார ஜமாஅத் முன்னாள் தலைவர் சுலைமான், சமூக நல்லிணக்க பேரவை தலைவர் முகமதுஷபி, தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் மாநிலத்தலைவர் சுபேதார் மகாராஜன், தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறை மற்றும் நாடார் சரஸ்வதி கல்வி நிறுவனங்களின் பொதுச்செயலாளர் ராஜ்மோகன், அகில இந்திய மருத்துவக் கழகத்தின் மாநில செயலாளர் டாக்டர் என்.ஆர்.டி., தியாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு முட்டை பிரியாணி வழங்கப்பட்டது. மேலும் பலருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!