பெரியகுளம் அருகே கிராமசபை கூட்டத்தில் வாக்குவாதம் : போலீசார் சமரசம்

பெரியகுளம் அருகே  கிராமசபை கூட்டத்தில்  வாக்குவாதம் : போலீசார் சமரசம்
X

பெரியகுளம் ஒன்றியம் எ.வாடிப்பட்டி கிராமசபை கூட்டத்தில் கூச்சல், குழப்பம் நிலவியதால் கூட்டம் பாதியிலேயே நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் பல்வேறு பிரச்னைகளை எழுப்பி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

பெரியகுளம் ஒன்றியம் எ.வாடிப்பட்டி கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் கிராமசபை கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகளை எழுப்பி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் குவிக்கப்பட்டு சமசரம் ஏற்படுத்தும் நிலை உருவானது. இதன் காரணமாக கிராம சபை பாதியிலேயே நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பெரியகுளம் ஒன்றியம், எ.வாடிப்பட்டி கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் முதியோர், விதவை, ஆதரவற்றோர் உதவித்தொகை பெற 6 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை கமிஷன் பெறுகின்றனர். குடிநீர் குழாய் இணைப்பு வழங்க 15 ஆயிரம் வரை செலவிட வேண்டி உள்ளது. சொத்துவரி, தொழில்வரி ரசீதுகள் பெறவும் பணம் தர வேண்டி உள்ளது. குப்பை சேகரிக்க கூட நாங்கள் பணம் தர வேண்டி உள்ளது. வளர்ச்சிப்பணிகளில் கடும் முறைகேடுகள் நடக்கிறது எனக்கூறி கடும் தகராறில் ஈடுபட்டனர். கடும் கூச்சல், குழப்பம் நிலவியதால் பிரச்னை பெரிதாகும் முன்னர் தடுக்கும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் தலையிட்டு மக்களை சமரசம் செய்தனர். பிரச்னையை தவிர்க்க பாதியிலேயே கூட்டம் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!