ஓபிஎஸ்-க்கும் அவரது மகனுக்கும் அதிமுகவுடன் தொடர்பில்லை: ஜெயக்குமார்

ஓபிஎஸ்-க்கும் அவரது மகனுக்கும்  அதிமுகவுடன் தொடர்பில்லை: ஜெயக்குமார்
X

ஓ.பி. ரவீந்திரநாத் (பைல் படம்)

ஓபிஎஸ்-க்கும் அவரது மகனுக்கும் அதிமுகவுடன் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பாக ஓ.பன்னீர்செல்வம் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் போட்டியிட்டு சுமார் 76 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அந்த தேர்தலில் ஓ.பி.ரவீந்திரநாத் அதிக அளவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தார், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார். எனவே தேர்தலை செல்லாது என அறிவிக்க வேண்டும் என தேனி தொகுதியை சேர்ந்த மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில், ஓ.பி. ரவீந்திரநாத் 2019 நடைபெற்ற தேனி தொகுதி மக்களவை தேர்தலில் பெற்ற வெற்றி செல்லாது என தீர்ப்பு வழங்கப்பட்டுட்டது. தற்போது இந்த தீர்ப்பு 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு, மேல்முறையீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: ஓபிஎஸ் -க்கும் அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத்துக்கும் அதிமுக கட்சிக்கும் எந்தவித தொடர்பும், சம்பந்தமும் இல்லை. தனது அருமை மகன் மட்டும் வெற்றி பெற்றால் போதும் என நினைத்து ஓபிஎஸ் பணத்தை வாரி வாரி இறைத்தார். இதைத்தான் இன்று நீதி மன்றம் சொல்லியிருக்கிறது. எனவே அவருக்கும் அதிமுக கட்சிக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்தார்.

2019-ம் ஆண்டு தேனி மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் பெற்ற தேர்தல் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை அறிவித்தது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். ரவீந்திரநாத் 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் ஈவிகேஎஸ். இளங்கோவனை தோற்கடித்தார்.

தேனி தொகுதி வாக்காளரான மிலானி என்பவர் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்அவரது வேட்புமனுவில் சொத்து விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளதாகவும், எனவே தேனி தொகுதியில் அவர் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தலைமையிலான தனி நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, ​​ஓ.பி.ரவீந்திரநாத் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். சாட்சியம் அளித்து கேள்விகளுக்கு பதிலளித்த ரவீந்திரநாத், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். மேலும் தேர்தல் அதிகாரிகள் முன்பு ஆஜராகி ஆவணங்களை சமர்பித்தார்.வழக்கின்விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து நீதிபதி மீண்டும் சில விளக்கங்களை கேட்டார். வழக்கை மீண்டும் விசாரித்தால் மட்டுமே ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும் என ரவீந்திரநாத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Tags

Next Story