ஒமிக்ரான் வைரஸ்: தேனி மாவட்டத்தில் இன்று முதல் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்
தேனி மாவட்டத்தில் இன்று முதல் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்துவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க பல்வேறு உலக நாடுகளும் கடும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. நம்நாட்டில் மத்திய, மாநில அரசுகள் மீண்டும் கொரோனா பரவல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களை அறிவுறுத்தி உள்ளன.
நேற்று காலை தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட நிர்வாகங்களுடன் கொரோனா தடுப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து நேற்று மாலை அனைத்துதுறை அரசு அதிகாரிகளுடன் தேனி கலெக்டர் முரளீதரன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'ஓமிக்ரான் பரவலின் உண்மைத்தன்மை பற்றி முழுமையாக அறிய இன்னும் பத்து நாட்கள் அவகாசம் தேவைப்படும். இருப்பினும் பரவலை தடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. எனவே இன்று முதல் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. மீண்டும் முககவசம் இல்லாமல் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது. வணிக வளாகங்கள், பள்ளி, கல்லுாரிகள், சினிமா தியேட்டர்கள், மார்க்கெட்டுகள், பஸ்ஸ்டாண்ட்கள் உட்பட அத்தனை இடங்களிலும் சமூக இடைவெளி கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும். முககவசம் இல்லாவிட்டால் கடும் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu