'போக்குவரத்து துறை வேண்டாம்' என மறுத்த ஐ.பெரியசாமி
அமைச்சர் ஐ.பெரியசாமி.
முதுகுளத்தூரில் ஒன்றிய நிர்வாகியாக இருப்பவர் ராஜேந்திரன். இவரை ஜாதி ரீதியாக திட்டியதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ராஜகண்ணப்பன் அமைச்சரவை இலாகா மாற்றப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இவருக்கு எதிராக ஏற்கனவே மற்ற சில குற்றச்சாட்டுகள் உள்ளன. லஞ்ச குற்றச்சாட்டுகள், ரெய்டு சம்பவம், சாதிய துவேசம், அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தில் பேருந்துகளை இயக்காதது என பல்வேறு விவகாரங்கள் ஒன்று சேர்ந்து அமைச்சர் ராஜ கண்ணப்பன் இலாகாவை மாற்றி விட்டது. பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்எஸ் சிவசங்கர் போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த இலாகா மாற்றத்திற்கு பின் என்ன நடந்தது என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.
ராஜ கண்ணப்பன் இலாகாவை மாற்றலாம் என ஸ்டாலின் முடிவு செய்த நிலையில், போக்குவரத்துத்துறையை யாரிடம் ஒதுக்குவது என முதல்வர் ஆலோசித்திருக்கிறார். அப்போது சீனியர் அமைச்சர் ஒருவரிடம் ஒப்படைப்பது சரியாக இருக்கும் என சொல்லப்பட்டிருக்கிறது. அந்த வகையில், சீனியர் அமைச்சர்களில் ஒருவரான ஐ.பெரியசாமியிடம் கொடுக்க முதல்வர் ஸ்டாலின் நினைத்திருக்கிறார்.
காரணம், தனக்கு பவர் ஃபுல்லான இலாகா இல்லை என்று ஆரம்பத்திலிருந்தே ஐ.பெரியசாமி அதிருப்தியில் இருந்தார். கூட்டுறவுத்துறை அமைச்சராக இவர் இருக்கிறார். தன்னுடைய வருத்தத்தை இவர் ஸ்டாலினிடமும் முன்பே தெரிவித்து விட்டார் என்கிறார்கள் அறிவாலய வட்டாரங்கள். அவரை அப்போது சமாதானம் படுத்திய ஸ்டாலின், சில மாதங்கள் போகட்டும் இலாகாவை மாற்றித் தருகிறேன் என ஸ்டாலின் சொல்லியிருந்திருக்கிறாராம்.
இந்த நிலையில்தான் தற்போது ராஜகண்ணப்பன் விஷயம் வந்ததும். அதை பயன்படுத்தி அமைச்சரவை இலாகாவை மாற்ற முதல்வர் ஸ்டாலின் முடிவுஎடுத்தார். அந்த வகையில்தான் போக்குவரத்துறையை ஐ.பெரியசாமிக்கு ஒதுக்கலாம் என ஸ்டாலின் நினைத்து இருந்தாராம். இது குறித்து ஐ.பெரியசாமியிடம் ஸ்டாலின் விவாதித்தாக கூறப்படுகிறது. என்ன போக்குவரத்து துறையை எடுத்துக்குறீங்களா என்று கேட்டு இருக்கிறார்? ஆனால் ஐ.பெரியசாமியோ, போக்குவரத்துத் துறை எனக்கு வேண்டாம் என மறுத்திருக்கிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
இதற்கு காரணம், திமுக ஆட்சி அமைத்ததில் இருந்தே, முக்கிய துறை(பத்திரபதிவாக இருக்குமோ..) ஒன்றின் அமைச்சராக வேண்டும் என அவர் எதிர்பார்த்தாராம். அந்த துறைக்குத்தான் ஆரம்பித்தில் இருந்தே அடி போட்டாராம். அந்த எதிர்பார்ப்பிலேயே அவர் இப்போதும் இருக்கிறாராம். இதுவே போக்குவரத்து துறையை அவர் மறுக்க காரணம் என்கிறார்கள். போக்குவரத்து துறையை ஏற்க ஐ.பெரியசாமி மறுத்த நிலையில்தான், சிவசங்கருக்கு ஒதுக்குவது என முடிவு செய்தார் ஸ்டாலின். போக்குவரத்து துறையை ஐ. பெரியசாமி ஏற்றிருந்தால், மேலும் சில இலாகாகள் மாற்றியமைக்கப்பட்டிருக்கும் என்கிறார்கள் திமுகவின் சீனியர்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu