அமீருடன் என்ன தான் பிரச்னை? தயாரிப்பாளர் ஞானவேல் விளக்கம்

அமீருடன் என்ன தான் பிரச்னை?  தயாரிப்பாளர் ஞானவேல் விளக்கம்
X

பைல் படம்

கார்த்தியை சினிமாவில் பருத்திவீரன் படத்தின் மூலம் இயக்குனர் அமீர் தான் அறிமுகப்படுத்தினார்

ஆனால், அப்பவே அமீருக்கும் சூர்யா, கார்த்தி, சிவகுமார், தயாரிப்பாளர் ஞானவேல் ஆகியோருக்கும் இடையே சில பிரச்னைகள் ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்தது. இதன் காரணமாத்தான் கார்த்தியின் 25-வது படமான ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு கூட கார்த்தி அமீரை அழைக்கவில்லையாம். இதன் மூலம் இவர்களுக்குள் பிரச்னைகள் இருப்பது உண்மை தான் என தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், அமீருடன் என்ன பிரச்சனை என்பது பற்றி தயாரிப்பாளர் ஞானவேல் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெளிவுபடுத்தி உள்ளார். அதில் இயக்குனர் அமீரை தாக்கி கடுமையாக பேசியுள்ளார். இது குறித்து பேசியதாவது: ‘‘மௌனம் பேசியதே படத்தின் போதே சூர்யாவுக்கும் அமீருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. அதற்கு காரணம் அவர் சூர்யாவிடம் சரியாக பேசாமல் அவரை சரியாக நடத்தவில்லை. இந்த விவகாரம் பற்றி பேச கூட எனக்கு விருப்பம் இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில், இயக்குனர் அமீர் தான் நல்லவர் என்று போல பேசியிருந்தார். இதனை பற்றி நான் சிவகுமாரிடம் பேசினேன். ஐயா உங்களை பற்றி கார்த்தி பற்றி சூர்யா பற்றி அவர் தவறாக பேசுகிறார். இதற்கு நாம் கண்டிப்பாக உண்மையை பேசியே ஆகவேண்டும் என்று சொன்னேன்.

எனவே, அதன் படி தான் நான் இப்போது பேசுகிறேன். எல்லாரும் சேர்ந்து படம் எடுப்பது தான் சினிமா. ஒரு தயாரிப்பாளராக படத்தை தயாரிக்கிறேன் என்றால் அந்த இயக்குனர் படத்தை நன்றாக எடுத்துக்கொடுப்பார் என்று நம்புகிறேன். மற்றபடி அவர் மீது சந்தேகப்படுவதெல்லாம் என்னை பொறுத்தவரை தவறு. பருத்திவீரன் திரைப்படம் 2 கோடி 75 லட்சத்தில் எடுக்கப்படவேண்டிய திரைப்படம். ஆனால், படம் எடுத்து முடிக்க அதிக பணம் ஆகிவிட்டது.

அன்று எனக்கு சினிமாவை பற்றி பெரிய அளவுக்கு எதுவும் தெரியாது. பருத்திவீரன் தான் என்னுடைய முதல் படம் எனவே, கணக்கில் என்னை அமீர் ஏமாற்றி விட்டார். பணத்தை உழைத்து சம்பாதிக்காமல் மாற்று வழிகளில் சம்பாதிக்கிறார் எனவும் சூசகமாக ஞானவேல் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் ” அன்று எனக்கு சினிமாவை பற்றி தெரியாது இன்று தெரியும் இப்போதெல்லாம் அவர் என்கிட்டே வந்து டீல் பேசினால் நான் பேசும் விதமே வேறுமாதிரி இருக்கும்.

படத்தினுடைய பட்ஜெட்டிற்கு படத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு பண்ணலாம் அதைவிட்டு விட்டு தன்னுடைய செலவுக்கு பணத்தை கணக்கில்லாமல் எடுத்தால் சும்மாக இருக்கமுடியுமா? என்னிடம் மட்டும் இருந்து அமீர் பணத்தை எடுக்கவில்லை. அன்பழகன் உள்ளிட்டோரிடமும் எடுத்து இருக்கிறார். அதற்கு ஆதாரம் வேண்டும் என்றால் அவர்களை இப்போது கூட வர வைக்கிறேன்.

எங்களுக்குள் பிரச்னை நடந்து 15 வருடங்களுக்கு மேல் ஆகிறது. அமீரிடம் நாங்கள் பேசிக்கிட்டது கூட இல்லை காரணம் அவரை நாங்கள் நினைக்கவே இல்லை. அவரை பற்றி நினைக்க கூட தோணவில்லை. இப்போது அவர் சூர்யா என்னுடைய நண்பர் சகோதரர் என்று சொல்வது எல்லாம் சூர்யா வாடிவாசல் படத்தில் அவரை வேண்டாம் என்று சொல்லிவிடுவாரோ என்ற பயத்தினால் தான்.

சூர்யா – கார்த்திக்கு துரோகம் செய்தவர் அமீர் தான். தெரியாம தப்பு பண்றவனை திருத்தலாம், தப்பாவே ஒருத்தன் இருக்கான்னா, அவனை எப்படி திருத்த முடியும்?. அமீர் சரியாக நடந்திருந்தால் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி இருப்போம். ஆனால் அவர் அப்படி நடந்து கொள்ளவில்லை என்று காட்டத்துடன் பேசியுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!