அதிமுகவுக்கு புதிய தலைவர்: களம் இறங்கிய டெல்லி ?
பைல் படம்
அதிமுக பாஜக மோதல் உச்சத்தில் உள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்களை இகழ்ந்து பேசியது இந்த கூட்டணி முறிய காரணமாக அமைந்தது. ஜெயலிதாவை அண்ணாமலை இகழ்ந்து பேசியது, அதை தொடர்ந்து அண்ணாவை இகழ்ந்து பேசியது என்று அண்ணாமலையின் தொடர் பேச்சுக்கள் அதிமுக தலைவர்களை கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றது.
இந்த மோதலே கூட்டணி உடைய முக்கிய காரணமாக அமைந்தது. இந்த கூட்டணி உடைவதற்கு முன் வேறு சில முக்கியமான சம்பவங்களும் நடந்து உள்ளதாக அதிமுக - பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று அதிமுக தலைவர்கள் கூறியதாக தெரிகிறது. அதாவது பாஜக தேசிய தலைவர் நட்டாவை தமிழ்நாடு அதிமுக குழு சமீபத்தில் சந்தித்தது. அங்கே ஆலோசனை செய்தனர். இந்த ஆலோசனையில் தான் கூட்டணி முறிவிற்கு அண்ணாமலை தான் காரணம். அவர் பேசியதே கூட்டணி உடைய காரணம். அவர் பேசாமல் இருந்தால் கூட்டணி உடைந்து இருக்காது. அதிமுக - பாஜக உறவை வளர்க்க வேண்டும். பாஜக வளர்வதை உறுதி செய்ய வேண்டும். அது சரிதான். ஆனால் பாஜகவை வளர்ப்பதற்காக அதிமுகவை காலி செய்வது. அதிமுக தலைவர்களை இகழ்வது எப்படி சரியாக இருக்கும்.
அதிமுக - பாஜக மோதல் உச்சம் அடைய அண்ணாமலை தான் காரணம். இந்த கூட்டணி ஒன்றாக இருக்க ஒரே வழி அண்ணாமலை தலைவராக இருக்க கூடாது என்பதே. அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று நாங்கள் சொல்ல முடியாது. அவரை மாற்ற வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்க முடியாது. ஆனால் அவர் இருக்கும் வரை கூட்டணி நீடிக்காது. அவர் இருந்தால் நாங்கள் கூட்டணி வைக்க முடியாது என்று பாஜக தலைவர்களிடம் அதிமுக தலைவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் இதை பாஜக தலைவர் நட்டா காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இதை தொடர்ந்தே கூட்டணி முறிவு முடிவை எடுத்துள்ளனர், என்று பாஜக - அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படிப்பட்ட நிலையில் தான் அதிமுகவினால் தங்களுக்கு எந்த பலனும் இல்லை என்றால் அதிமுக தலைமையை கூட மாற்ற பாஜக துணியும் என்கிறார்கள் பாஜக வட்டாரத்தினர். அதன்படி அதிமுகவில் எடப்பாடிக்கு முழு ஆதரவை பாஜக கொடுக்க ஒரே காரணம். பாஜகவிற்கு அதிமுக முழு சப்போர்ட் கொடுக்கும். தேர்தல் நேரத்தில் கூட்டணி வைக்கும். பாஜகவிற்கு ஆதரவாக தேர்தல் நேரத்தில் அதிமுக செயல்படும் என்றுதான் எடப்பாடிக்கு ஆதரவு கொடுத்தோம்.
ஆனால் அப்படிப்பட்ட அதிமுக எங்கள் கூட்டணியை முறித்து விட்டால் நாங்கள் ஏன் எடப்பாடிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் ? எடப்பாடி பழனிசாமி இருந்தால் கூட்டணி நடக்காது என்றால். எடப்பாடியை மாற்ற கூட நாங்கள் தயாராக இருக்கிறோம். எடப்பாடி தான் கூட்டணிக்கு தடையாக இருக்கிறார் என்றால் அவருக்கு பதில் வேறு ஒரு தலைவரை நாங்கள் கொண்டு வர முடியும். எங்கள் தலைவரை அவர்கள் மாற்ற வேண்டும் என்றால் சொன்னால் உங்கள் தலைவரை நாங்கள் மாற்றுவோம் என்று பாஜக வட்டாரத்தினர் கோபமாக தெரிவிக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu