எம்.ஜி.ஆர் - ஜெ.,க்கு இணையாக எடப்பாடியை கொண்டாடுவது சரியா?
பைல்
தமிழக முதல்வராக எடப்பாடி பொறுப்பேற்ற பின்னர், அ.தி.மு.க.,வில் அதிரடி மாற்றங்கள் நடந்தன. எடப்பாடி பழனிச்சாமி தன்னை முதல்வராக்கிய சசிகலாவை கட்சியை விட்டு நீக்கினார். அடுத்து டி.டி.வி., தினகரனை நீக்கினார். அடுத்து தர்மயுத்த தலைவன் ஓ.பி.எஸ்.,ஐ நீக்கினார். கட்சியில் தான் வலுவான தலைவர் என்பதை நிரூபிக்க பொதுக்குழு, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை பலமுறை கூட்டி, பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து கட்சியின் பொதுச்செயலாளராக தன்னை உருவாக்கிக் கொண்டார்.
ஆட்சியில் இருக்கும் போது கூட பா.ஜ.,வை அனுசரித்து சென்ற எடப்பாடி, தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் போது, துணிச்சலாக பா.ஜ.க.,வின் உறவை முறித்தார். அ.தி.மு.க.,- பா.ஜ.க., விரிசல் ஒரு நாடகம் என பலரும் விமர்சித்த நிலையில், லோக்சபா தேர்தல் மட்டுமல்ல... அடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் பா.ஜ.க.,வுடன் உறவு கிடையாது என எடப்பாடியே நேற்று அறிவித்து விட்டார்.
இந்த நிகழ்வுகள் அத்தனையும் ஹேஸ்டேக்குகளாக வைத்து எடப்பாடியை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அளவுக்கு அ.தி.மு.க., ஐ.டி., விங்க் கொண்டாடி வருகிறது. மிகவும் வலுவான முடிவுகளை எடுக்கிறார். எடுத்த முடிவில் மிகவும் உறுதியாக நிற்கிறார். எனவே எடப்பாடியும் பலம் வாய்ந்த தலைவர் தான் என அ.தி.மு.க., ஐ.டி., விங்க் கொண்டாடி வருகிறது.
ஆனால் பா.ஜ.க., உட்பட மற்ற கட்சித்தலைவர்கள், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரும் மக்கள் செல்வாக்கு மூலம் கட்சி தலைமையை கைப்பற்றி, தேர்தல்களில் வென்று ஆட்சியை பிடித்தவர்கள். ஆனால் எடப்பாடியே குறுக்கு வழியில் கட்சித்தலைமையை கைப்பற்றி உள்ளார். தனது பதவியை காப்பாற்ற யார்... யார் இடையூறாக இருப்பார்களோ அவர்களை வெளியேற்றி வருகிறார்.
இதனை வைத்து எடப்பாடி வலுவான தலைவர் என கூறி விட முடியாது. எடப்பாடி பொறுப்பேற்ற பின்னர் ஒரு தேர்தலில் கூட அ.தி.மு.க., வெற்றி பெறவில்லை என்பதை மறந்து விடக்கூடாது. எடப்பாடிக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்பதையே இதுவரை நடந்த தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டி உள்ளது. இனி வரும் தேர்தலில் அவர் வென்று காட்டினால், மக்கள் செல்வாக்கு உண்டு என்பதை நம்பலாம் என விமர்சித்து வருகின்றனர். எடப்பாடியும் ஒரு எம்.ஜி.ஆரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu