ரூ.150 செலவில் கொடைக்கானலை சுற்றிப்பார்க்கலாம்

ரூ.150  செலவில் கொடைக்கானலை  சுற்றிப்பார்க்கலாம்
இந்த திட்டத்தை செயல்படுத்த முதல்வர் ஸ்டாலின் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

மலைகளின் இளவரசி கொடைக்கானலில் தற்போது சீசன் தொடங்கி உள்ளது. தினமும் பல ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் வரத்தொடங்கி உள்ளனர். இவர்களின் வருகையால் கொடைக்கானலில் நெரிசல் தொடங்கி உள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொடைக்கானல் பகுதியில் உள்ள தனியார் வாகன ஓட்டுனர்கள் அதிகளவு கட்டணம் வசூலித்து வருகின்றனர். அவர்கள் இந்த இரண்டு மாதம் தான் சீசன். இந்த சீசனில் சம்பாதிப்பது தான் எங்களின் ஓராண்டுக்கான வாழ்க்கை செலவு என கூறுகின்றனர். ஆனால் சுற்றுலா பயணிகளிடம் தனியார் வாகன ஓட்டுனர்கள் கேட்கும் அளவு கொடுக்க பணம் இல்லை. இதனால் கொடைக்கானல் சென்றாலும், ஓரிரு இடங்களை மட்டும் பார்த்து விட்டு திரும்புகின்றனர்.

இது போன்ற பயணிகள் கொடைக்கானலை முழுமையாக சுற்றிப்பார்க்க புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி தமிழ்நாடு அரசின் பொது போக்குவரத்து உதவியுடன் ரூ.150-க்கு கொடைக்கானலை சுற்றுப்பார்க்கும் விதமாக புதிய திட்டத்தை அரசு போக்குவரத்து கழகம் தொடங்கியுள்ளது. அதன்படி கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பி அப்பர் லேக் வியூ, மோயர் பாயிண்ட், பைன் பாரஸ்ட், குணா குகை, தூண் பாறை, பசுமை பள்ளத்தாக்கு, பிரையண்ட் பூங்கா வழியாக பனிரெண்டு இடங்களை சுற்றிக் காட்டிய பின்னர் ஏரியில் சுற்றுலா பயணிகளை இறக்கி விடுகிறது இதற்காக பெரியவர்களுக்கு ரூ.150-ம், சிறியவர்களுக்கு ரூ.75- ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.இதற்கு சுற்றுலா பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த திட்டத்தால் தனியார் போக்குவரத்திற்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால் அவர்கள் அரசியல் பலத்தை பயன்படுத்தி இதனை முடக்க முயற்சிக்கலாம். எனவே முதல்வர் ஸ்டாலின் மிகவும் உறுதியாக இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story