மனைவியை கொலை செய்து கோழிக்கூண்டுக்குள் வீசிய கணவர் கைது

மனைவியை கொலை செய்து  கோழிக்கூண்டுக்குள் வீசிய கணவர் கைது
X
மனைவியை கொலை செய்து கோழிக்கூண்டுக்குள் வீசிய விவசாயி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

மனைவியை கொலை செய்து கோழிக்கூண்டுக்குள் வீசிய நபரை மயிலாடும்பாறை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள மயிலாடும்பாறை தாலிப்பாறை கிராமத்தில் வசிப்பவர் கணேசன். இவரது மனைவி அம்சகொடி. இவர்கள் தங்களது தோட்டத்தில் வீடு கட்டி வசித்து வந்தனர். கணேசன் குடிப்பழக்கம் உடையவர். மனைவியை சந்தேகப்படுவதால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு நடக்கும். இரண்டு நாட்களுக்கு முன்னர் கணேசன் மனைவியுடன் சண்டை போட்டுள்ளார்.

அப்போது தோட்டத்தில் இருந்த கணேசன் தம்பி மருமகள் பாண்டியம்மாள் இது வழக்கமான சண்டை என நினைத்து சென்று விட்டார். இந்நிலையில் அம்சகொடியை காணவில்லை. இந்நிலையில் அவரது தம்பி ராமர் வீட்டிற்கு வந்த போது, கணேசன் தனது மனைவியின் உடலை எடுத்துச் சென்று கோழிக்கூண்டுக்குள் போட்டுள்ளார். இது பற்றி ராமர் விசாரித்த போது, கணேசன் மழுப்பலாக பதில் கூறியுள்ளார். சந்தேகம் அடைந்த ராமர் கோழிக்கூண்டை பார்த்த போது, அங்கு அம்சகொடி இறந்து கிடந்துள்ளார்.ராமர் கொடுத்த புகாரின்பேரில், மயிலாடும்பாறை போலீசார் கணேசனை கைது செய்து விசாரித்தனர். அவர் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதால், சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!