கண்ணதாசனை கையெடுத்து கும்பிட்ட இசையமைப்பாளர்
கவியரசர் கண்ணதாசன்- குன்னக்குடி வைத்தியநாதன்
மருதமலை மாமணியே என்ற பாடலில் குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் கண்ணதாசனுக்கும் ஒரு செல்ல போட்டி நடந்தது.. இதை குன்னக்குடியே பல இடங்களில் சொல்லியுள்ளார்.
பொதுவாக சினிமா பாடல்கள் எழுதும் போது, இசையமைப்பாளருக்கும், கவிஞருக்கும் இடையே பல சுவாரஸ்யங்கள் நடக்கும். ஆதி இசை காலம் முதல் தற்போது வரை இப்படிப்பட்ட சுவாரஸ்யங்கள் நடந்து வருகிறது. அப்படி ஒன்று தான் குன்னக்குடி வைத்தியநாதனுக்கும், கவிஞர் கண்ணதாசனுக்கும் நடந்தது. இது பற்றி குன்னக்குடி வைத்தியநாதன் பல இடங்களில் சொல்லியுள்ளார். அதாவது, தனது வயலினில் ஒரு மெட்டை குன்னக்குடி வாசிப்பார். சிறிதும் யோசிக்காமல் கண்ணதாசன் அதற்கு பாட்டு எழுத வேண்டும்.
இது தான் போட்டி. குன்னக்குடி கடினமான மெட்டுக்கள் வரும்படி வாசித்தாராம். ஆனால் ஒவ்வொரு முறையும் கண்ணதாசன் அதற்கான வார்த்தைகளை உடனுக்குடன் கூறிவிடுவாராம். அந்த பாடல்களில் ஒன்று தான் மேலே சொன்ன 'மருதமலை மாமணியே' பாடல். ஒரு கட்டத்தில் சற்றே கடினமான மெட்டை வயலனில் வாசித்து 'இதற்கான வார்த்தைகளை கூறுங்கள்' என்றாராம் குன்னக்குடி. உடனடியாக வந்து விழுந்த வார்த்தைகள் "சக்திச்சரவண முத்துக்குமரனை மறவேன்"....குன்னக்குடி வைத்தியநாதன் இதே பாடலில் முடிவில் வேண்டுமென்றே வயலினில் சம்பந்தம் இல்லாமல் நிச நிச நிச நிச என்று வேகமாக வாசித்து விட்டாராம்.
கவிஞர் உடனே இதைத்தான் எதிர்பார்த்தேன் என்று மலையடி, நதியடி, கடலடி சகலமும் உனதடி என்ற வார்த்தையை எழுதியவுடன் வயலினை நான்ம் கீழே வைத்து "ஐயா ,என்னை விட்டு டுங்க"ன்னு கும்பிட்டேன் என்றார் குன்னக்குடி வைத்தியநாதன்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu