கண்மாய் கரையை சீரமைக்க கோரி விவசாயிகள் முற்றுகை போராட்டம்

கண்மாய் கரையை சீரமைக்க கோரி  விவசாயிகள் முற்றுகை போராட்டம்
X
கூடலுார் ஒட்டான்குளம் கரையை சீரமைக்க வலியுறுத்தி விவசாயிகள் கம்பம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்

கூடலுார் ஒட்டான்குளம் கரையினை சீரமைக்க வலியுறுத்தி கம்பம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

கூடலுார் ஒட்டான்குளம் கரை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. விவசாய விளைபொருட்களை கொண்டு வரும் கனரக வாகனங்கள் இதனால் விபத்தில் சிக்கி வருகின்றன. இந்த கரையினை சீரமைத்து, தார்ரோடு அமைத்து தர விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.

இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் கூடலுார் முல்லை சாரல் விவசாயிகள் சங்கம், முல்லை பெரியாறு பாசன மற்றும் குடிநீர்பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று கம்பம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.அதிகாரிகள் விவசாயிகளுடன் பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி கரையினை சீரமைத்து தருவதாக உறுதி கொடுத்ததை தொடர்ந்து, போராட்டம் இன்று மாலை விலக்கிக் கொள்ளப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!