தேனியில் டிராவல்ஸ் அதிபர் வீட்டில் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு

தேனியில் டிராவல்ஸ் அதிபர் வீட்டில் பூட்டை உடைத்து நகை  பணம் திருட்டு
X
தேனியில் டிராவல்ஸ் உரிமையாளர் வீ்ட்டில் நகை, பணம் திருடியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

தேனி ரத்தினம்நகரில் வசிப்பவர் சரவணன்(வயது 47.) இவர் தனது மனைவி பொற்செல்வியுடன் இணைந்து டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர்கள் தங்கள் நிறுவனத்திற்கு காலையில் வேலைக்கு சென்று விட்டு மாலை 5 மணிக்கு வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைந்திருந்தது. பீரோவில் இருந்த 18 பவுன் நகைகள், வெள்ளிக்கொலுசு, 65 ஆயிரம் ரூபாய் ரொக்கம் திருட்டு போனது தெரியவந்தது. அல்லிநகரம் இன்ஸ்பெக்டர் கண்ணன், எஸ்.ஐ., பாண்டியம்மாள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!