எடப்பாடியை இயக்கும் அந்த இரண்டு பேர்
பைல் படம்
சில வாரங்களுக்கு முன் அதிமுக - பாஜக கூட்டணியை எடப்பாடி பழனிசாமி முறித்தார். இஸ்லாமியர்களே.. நீங்கள் ஆசைப்பட்டது போல.. நீங்கள் எல்லோரும் எதிர்பார்த்தது போலவே அதிமுக தனியாக வந்து விட்டது. பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு அதிமுக தனியாக வந்து விட்டது. இனி நாங்கள் தனியாகவே கூட்டணி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தெரிவித்தார். அப்போதே அவரின் பிளான் தமிழ்நாடு அரசியலில் பலருக்கும் தெரிந்து விட்டது.
இஸ்லாமியர்களை தங்கள் பக்கம் இழுக்க எடப்பாடி தீவிரமாக முயல்கிறாரோ.. அதுதான் அவரின் திட்டமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில்தான், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியை கண்ட்ரோல் செய்வதே 2 பேர்தான் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நம்மிடம் பேசிய அதிமுக தலைகள் சிலர்.. லோக்சபா தேர்தல் நெருங்கும் போது அதிமுக - பாஜக இணைய வேண்டும் என்று அதிமுகவிலேயே சிலர் நினைக்கின்றனர்.
கொங்கு மண்டலத்தை சேர்ந்த விஐபி எம்எல்ஏ ஒருவர் அதில் தீவிரமாக இருக்கிறார். கொங்கில் அதிமுக - பாஜக பிரிந்து நின்றால் அது திமுகவிற்குத் தான் சாதகமாக மாறும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதுதான் நடந்தது. அதனால் அதிமுக - பாஜக மீண்டும் கூட்டணி அமையும். இதனால் தான் அவர்கள் மீண்டும் சேருவார்கள் என்று நான் கூறுகிறேன். மோடி வேண்டாம் என்பது திமுக வாதம். மோடி தான் வேண்டும் என்பது பாஜக வாதம். அப்படி இருக்க அதிமுக எதை சொல்லி வாக்கு கேட்கும் என்பதால் அதிமுக - பாஜக இணைய வேண்டும் என்று அதிமுகவிலேயே சிலர் நினைக்கின்றனர்.
தேர்தல் நெருங்கும் போது அதிமுக - பாஜக சேர வேண்டிய கட்டாயம் உள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கும் போது அதிமுக - பாஜக இணைய வேண்டும் என்று அதிமுகவிலேயே சிலர் நினைக்கின்றனர். கொங்கு மண்டலத்தை சேர்ந்த விஐபி எம்எல்ஏ ஒருவர் அதில் தீவிரமாக இருக்கிறார் என்று கூறுகின்றனர்.
ஆனால் இதை வேறு சில அதிமுக தலைகள் தடுக்கிறார்களாம். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியை கண்ட்ரோல் செய்வதே 2 பேர் தான் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் இரண்டு பேர்தான்.. பாஜகவோடு கூட்டணி வேண்டாம். நாங்கள் சொல்வதை கேளுங்கள்.
பாஜகவுடன் இருந்தால் நமக்குத் தான் சிக்கல் என்று அந்த 2 பேர் எடப்பாடியை கட்டுப்படுத்துகிறார்களாம். அதோடு இல்லாமல்.. மாவட்ட செயலாளர்கள் நியமனம், பல்வேறு நிர்வாகிகள் நியமனம் என்று அனைத்திலும் எடப்பாடி பழனிச்சாமி எடுக்கும் முடிவிற்கு பின் இவர்கள்தான் இருக்கிறார்களாம். அதாவது இவர்கள் சொல்வதை கேட்டுத்தான் எடப்பாடி முடிவு எடுக்கிறாராம்.
குறி வைக்கும் அமித் ஷா: இந்த விவகாரத்தில் விரைவில் பாஜக முடிவு எடுக்கும் என்கிறார்கள். பாஜகவிற்கு எதிராக எடப்பாடியை வழிநடத்தும் அந்த 2 பேரை பாஜக எப்போது வேண்டுமானாலும் குறி வைக்கும். அது மோதலை பெரிதாக்கும். ஏன் அதிமுகவை கூட உடைக்கும் நிலை ஏற்படும் என்று பாஜகவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu