கூட்டணி முறிவுக்கு இதுதான் காரணமா?
பைல் படம்
அண்ணாமலையும், அதிமுகவுடன் தங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என கூறியிருந்தார் செல்லூர் ராஜூ அண்ணனும் மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி வர வேண்டும் என்று கூறியிருந்தார்.
ஆனால் தமிழக முதல்வராக எடப்பாடி வருவார் என நான் எப்படி கூற முடியும். இதை தேசிய தலைமை தான் சொல்ல வேண்டும் என்று. மேலும் தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என கூறி நான் தலைவர் பதவிக்கு வந்துள்ளேன். அப்படியிருக்கும் போது வேறு ஒருவர் அடுத்த முதல்வர் என நான் எப்படி கூற முடியும் என கேள்வி எழுப்பியிருந்தார்.
மாநிலத்தில் 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்படும் என அதிமுகவினர் காத்திருக்கும் நிலையில் அண்ணாமலையோ அதை எப்படி நான் சொல்ல முடியும் என கேட்டிருந்ததே கூட்டணி முறிவுக்கு காரணம் என சொல்லப்படுகிறது.
அதிமுக பொதுச் செயலாளரானதும் தனது செல்வாக்கை நிரூபிக்க வரும் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி முன்னிறுத்தப்படவுள்ள நிலையில் அண்ணாமலை கூறிய கருத்து அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யிருந்தது.
தமிழகத்தில் ஆட்சியில் இல்லாத பாஜகவே அவர்களுடைய கட்சியை ஆட்சியில் அமர்த்த முற்படும் போது நாம் ஏன் அவர்களுடன் கூட்டணியில் இருக்க வேண்டும் என நிர்வாகிகள் பலர் இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.இது அதிமுக தரப்பில் தெரிவிக்கப்படும் தகவல்.
ஆனால் பாஜக தரப்பில் வேறு வகையான தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. எடப்பாடி கூட்டணி குறித்து பாஜக வுடன் பேசிக்கொண்டே, விடுதலைச்சிறுத்தைகள், காங்., உள்ளிட்ட கட்சிகளுடன் மறைமுகமாக பேசி வந்ததாகவும், இந்த தகவல் உளவுத்துறை மூலம் பாஜக தலைமைக்கு எட்டியதால் அவர்கள் கடும் அதிருப்தி அடைந்து விட்டதாகவும், இதனால் தான் டெல்லி சென்ற எடப்பாடியை கண்டித்ததோடு, டெல்லிக்கு வந்த அதிமுக நால்வர் குழுவை சந்திக்காமல் திருப்பி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
தவிர பாஜக தலைமையின் அனுமதியின் பேரில் தான் அண்ணாமலை, முத்துராமலிங்கதேவர்- அண்ணத்துாரை இடையே நடந்த விவகாரத்தை கிளப்பியதாகவும், அதிமுக வை பாஜக திட்டமிட்டே ஒதுக்கி விட்டது என்றும் கூறி வருகின்றனர். ஆக தேர்தல் கூட்டணி சூடு பிடித்ததை தொடர்ந்து, அடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu