சினிமாவில் நடிக்க வருகிறாரா நடிகை ரோஜாவின் மகள்

சினிமாவில் நடிக்க வருகிறாரா  நடிகை ரோஜாவின் மகள்
X

மகள்- கணவர்- மகனுடன் நடிகை ரோஜா.

நடிகை அமைச்சருமான ரோஜாவின் மகள் சினிமாவில் நடிக்கப்போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நடிகை ரோஜா செம்பருத்தி படம் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆனார். பெரும் வெற்றியை ஈட்டிய இந்த படத்தின் இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை இவர் திருமணம் செய்து கொண்டார். ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தைகள் உள்ளன. தற்போது ரோஜா ஆந்திர மாநில அரசியலில் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் அமைச்சராகவும் வலம் வருகிறார்.

இந்நிலையில் இவரது மகள் அன்ஷுமாலிகா கதாநாயகியாக அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் பரவின. மேலும் அன்ஷுமாலிகா நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக இருப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது அன்ஷுமாலிகாவின் தந்தை இயக்குநர் ஆர்.கே செல்வமணி இது பற்றி கூறுகையில், "அன்ஷுமாலிகா சிறுவயதிலிருந்தே பெரிய படிப்பாளி 500 விருதுகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் வாங்கியுள்ளார்.

ப்ளஸ் டூ முடித்துவிட்டு அன்ஷுமாலிகா மேற்படிப்பு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கவேண்டும் என்றார். அவரது விருப்பப்படி படிக்க வைத்தோம். தற்போது, பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க, அமெரிக்கா போயிருக்கார். இன்னும் நாலு வருஷம் அமெரிக்கால தான் இருப்பார். அதனால் படத்துல நடிக்கப்போறார், இந்த ஹீரோவுக்கு ஹீரோயினா அறிமுகமாகப்போறார் என்பதெல்லாமே வதந்தி தான். எந்த செய்தியிலும் உண்மையே இல்லை" என்றார். இதனை கேட்ட நடிகை ரோஜாவின் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!