அண்ணாமலை முதல்வரா? கொந்தளித்த அ.தி.மு.க

அண்ணாமலை  முதல்வரா?  கொந்தளித்த அ.தி.மு.க
X

பைல் படம்

அண்ணாமலை 2026ல் தமிழக முதல்வர் வேட்பாளர் என பாஜக கூறியதை அதிமுக ஏற்காததே கூட்டணி முறிக்கு காரணம்.

அண்ணாமலை வளர்ந்து கொண்டு இருக்கிறார், 2026ல் அவர் முதல்வர் வேட்பாளர் ஆகும் வாய்ப்புகள் உள்ளன. அதை எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை. அதிமுக - பாஜக கூட்டணி மோதல் உச்சம் அடைந்த நிலையில் கூட்டணி மோதலுக்கு மொத்தமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதன்படி பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்வதாக அதிமுக அறிவித்தது.

டெல்லியில் சமாதான பேச்சு, சென்னையில் நடந்த சமாதான பேச்சுக்கள் எல்லாம் தோல்வியில் முடிந்த நிலையில் தான் அதிமுக இந்த முடிவை எடுத்துள்ளது. முக்கியமாக அண்ணாமலை தொடர்ந்து அதிமுக தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி இந்த முடிவிற்கு வந்துள்ளார். இதைத் தொடர்ந்து அதிமுக - பாஜக கூட்டணி முறிந்துள்ளது.

உண்மையில் அதிமுகவினர் அண்ணாமலையை மாற்ற சொன்னார்கள் என்றால் பாஜகவினர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற சொல்ல முடியுமா? அதிமுக அப்படி கோரிக்கை வைத்தால். பாஜக பதிலுக்கு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோரிக்கை வைத்தால் என்ன செய்வார்கள்? அதை இவர்களால் தடுக்க முடியுமா? அண்ணாமலை பேசியதற்காக அவரை எதிர்த்ததாக கூறினார்கள். அவரை இப்படியாக எதிர்த்து இருக்க வேண்டும்.

அண்ணாமலை வளர்ந்து கொண்டு இருக்கிறார். 2026ல் அவர் முதல்வர் வேட்பாளர் ஆகும் வாய்ப்புகள் உள்ளன. அதை எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை. அண்ணாமலை பிரபலம் அடைவதை அதிமுக விரும்பவில்லை. அதனால் அதிமுகவினர் எரிச்சல் அடைந்துள்ளனர். அதனால் தான் மோடி பிரதமர். எடப்பாடி முதல்வர் என்று சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதை எப்படி பாஜக சொல்ல முடியும்.

எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் என்றால் பாஜக ஏன் இங்கே தலைவர்களை நியமிக்க வேண்டும். எந்த கட்சியாக இருந்தாலும் முதல்வர் பதவிக்கு வாய்ப்பு தேடும். அப்படி இருக்க பாஜக மட்டும் எப்படி எடப்பாடியை முதல்வர் என்று சொல்ல முடியும்.

பாமகவிற்கு அன்புமணி முதல்வர் ஆக வேண்டும் என ஆசை. தேமுதிகவுக்கு விஜயகாந்த் முதல்வர் ஆசை. இப்படி எல்லா கட்சியும் முதல்வரை உருவாக்கும் திட்டத்தில் உள்ளது. அப்படி இருக்க பாஜக ஏன் ஆசைபட கூடாது. கூட்டணியை முறித்தால் சிறுபான்மையினர் வாக்குகள் தனக்கு வரும் என்று எடப்பாடி நினைக்கிறார். முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள் இவர்களை நம்ப மாட்டார்கள். திமுக கூட்டணிக்கு வேண்டுமானால் அவர்கள் வாக்களிப்பார்கள். இப்போது கூட்டணியை முறித்துக்கொண்டு பாஜகவை அதிமுக எதிர்த்தாலும் எப்படி சிறுபான்மையினர் நம்புவார்கள். அதிமுக மீண்டும் பாஜகவிடம் சேரும் வாய்ப்புகள் உள்ளது என்று தான் சிறுபான்மையினர் நினைப்பார்கள். தேர்தல் நேரத்தில் கூட்டணியை உடைத்த அதிமுகவை சிறுபான்மையினர் எப்படி நம்புவார்கள். அப்படியே வந்தாலும் கூட 1% வாய்ப்புகள் வரும். ஆனால் அதிமுக இழக்க போவது அதிகம். உதாரணமாக ஜெயலலிதா இருந்த போது பாஜக வாக்குகளையும் சேர்த்து பெற்று வந்தார். இப்போது ஜெயலலிதா இல்லை. அண்ணாமலை பாஜகவை வலிமையாக்கி விட்டார். அப்படி இருக்க இந்துத்துவா வாக்குகள் எல்லாம் பாஜகவிற்கு வரும்.

ஜெயலலிதாவிற்கு அப்போது சென்ற வாக்குகள் அதிமுகவிற்கு இனி செல்லாது. அது பாஜகவிற்கு வரும். அதோடு அதிமுகவில் உட்கட்சி பூசல் உள்ளது. அதிமுக உள்ளே ஹவுஸ் ஆப் தி ஆர்டர் சரியாக இல்லை. அதிமுக வரிசையாக தோல்விகளை சந்தித்தது. அதை ஏன் எடப்பாடியால் தடுக்க முடியவில்லை.

ஜெயலலிதா சென்ற பின் அதிமுக கட்சி ஏன் வெல்ல முடியவில்லை. ஜெயலலிதா என்ற ஆளுமை போன பின் அதிமுக ஒரு தேர்தலில் கூட வெற்றி பெற முடியவில்லை. ஜெயலலிதாவிற்கு நிகராக ஒரு தலைவர் அதிமுகவில் இல்லை. அதிமுகவில் இனி உருவாகவே முடியாது. அதிமுக ஒருவேளை எடப்பாடியை பெரிய ஆளாக நினைத்தால்.. மோடியை எடப்பாடி எதிர்க்கட்டும். 2029 தேர்தலில் மோடியை எதிர்த்து பிரதமர் வேட்பாளராக நிற்கட்டும். மோடியா எடப்பாடியா என்று கேட்டு அரசியல் செய்யட்டும். அவர்களுக்கு அப்போதும் கூட சிறுபான்மையினர் வாக்குகள் எடப்பாடிக்கு கிடைக்காது. அதுதான் உண்மை. அதை அவர்கள் உணர்ந்து கொள்ளட்டும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!