உதவிக்கு ஆள் கூப்பிடாமல் தனியே மக்களை சந்திக்கும் சுயேச்சை வேட்பாளர்

உதவிக்கு ஆள் கூப்பிடாமல் தனியே மக்களை சந்திக்கும் சுயேச்சை வேட்பாளர்
X

தன்னந்தனி நபராக சென்று மக்களை சந்தித்து தனது வாக்குறுதிகளை தெரிவித்து ஓட்டு கேட்கும் சுயே., வேட்பாளர்.

தேனி நகராட்சி நான்காவது வார்டு சுயேச்சை வேட்பாளர் வி.ஆர்.,ராஜன் உதவிக்கு ஆட்களை கூப்பிடாமல் மக்களை தன்னந்தனியாக சென்று சந்திக்கிறார்

தேனி நகராட்சியில் நான்காவது வார்டில் சுயேட்சை வேட்பாளராக தொழிலதிபர் வி.ஆர்.,ராஜன் என்பவர் தென்னை மரச்சின்னத்தில் களம் இறங்கியுள்ளார்.

தற்போது நகரில் பெரிய அளவில் பிரச்சாரம் களை கட்டி உள்ளது. ஒவ்வொரு வேட்பாளரும் குறைந்தபட்சம் 30 முதல் 50 பேரை தன்னுடன் அழைத்துக் கொண்டு வீடு, வீடாக சென்று ஓட்டு கேட்கின்றனர். மாலை, துண்டு, சால்லை அணிவித்து பந்தா காட்டுகின்றனர்.

ஆனால் தொழிலதிபர் வி.ஆர்., ராஜன் யாரையும் தன்னுடன் கூப்பிடவில்லை. இவரது அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மட்டும் இரண்டு பேர் இவருடன் செல்கின்றனர். நான்காவது வார்டில் வீடு, வீடாக தன்னந்தனியாக சென்று மக்களிடம் அமர்ந்து தனது கோரிக்கைகளை பேசி, மக்களுக்கு புரிய வைத்து ஓட்டு கேட்கிறார்.

இவரது தேர்தல் வாக்குறுதிகள் தேனி மாவட்டத்தை கலங்கடித்து வருகின்றன. இந்நிலையில் தேர்தல் களத்திலும் இவரது அணுகுமுறை மக்களை மிகவும் கவர்ந்து வருகிறது. இது பற்றி கூறிய ராஜன், நான் தான் வேட்பாளர். நான் தான் ஓட்டு கேட்க வேண்டும். எனக்கு ஓட்டு கேட்க நண்பர்கள் வேண்டாம். காரணம் எல்லா கட்சியிலும் நண்பர்கள் எனக்கு உள்ளனர். ஒருவரை அழைத்தால், அவர் மற்றவருக்கு பகையாவார். எனது நண்பர்களுக்கு நெருக்கடி தர நான் விரும்பவில்லை. மக்களுக்கு சேவை செய்வதே என் தொழில். அதனை வழக்கம் போல் செய்து வருகிறேன். எனது இந்த அணுகுமுறை மக்களுக்கு பிடித்து விட்டது. என்னை தனிப்பட்ட முறையில் அழைத்து பாராட்டுகின்றனர் என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!