தேனி கூடலூர் சாலையில் நடந்த சாலை விபத்தில் மூன்று வாலிபர்கள் பலி

தேனி கூடலூர் சாலையில் நடந்த சாலை விபத்தில்   மூன்று வாலிபர்கள் பலி
X
தேனி- கூடலுார் செல்லும் நான்கு வழிச்சாலையில் நடந்த விபத்தில் மூன்று வாலிபர்கள் உயிரிழந்தனர்.

தேனி மாவட்டத்தில் தேனி- கூடலுார் நான்கு வழிச்சாலையும், தேசிய நெடுஞ்சாலையும் மரணக்கிணறு என போக்குவரத்து போலீசாரால் அழைக்கப்படுகிறது. அந்த அளவு இந்த ரோட்டில் விபத்துக்கள் அதிகம் நடக்கின்றன. இந்த ரோட்டில் விபத்துக்களை தடுப்பது அவசியம். அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள். முதலில் விபத்து தடுப்பு கூட்டமைப்பு அமைக்க வேண்டும். அதன் பின்னர் நாமே தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூடலுாரில் சமூக ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து திட்டமிட்டனர். நேற்று மதியம் தான் இந்த திட்டமிடல் தொடங்கி, அதற்கான ஏற்பாடுகள் நடந்தன. துரதிஷ்டவசமாக இரவிலேயே இந்த ரோடு மூன்று வாலிபர்களை பலி வாங்கி விட்டது.

கூடலூர் ராணுவவீரர் தர்மராஜ், 23, அவரது நண்பர் லியோசாம், 26 ஆகியோர் சென்ற டூ வீலரும், எதிரே வந்த ராஹேஸ்குமார் என்பவரது டூ வீலரும் கூடலூர் அப்பாச்சி பண்ணை அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் மூவரும் பலியாகினர். கூடலுார் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!