முதல்வரின் கருணை பார்வையால் நரிக்குறவர்களுக்கு பெருகி வரும் மரியாதை
வீரபாண்டி முல்லையாற்று பாலத்தில் கடை விரித்திருக்கும் நரிக்குறவர் இன மக்கள்.
நரிக்குறவ பெண் கவுசல்யா தமிழக முதல்வரை சந்தித்தது, அவரது வீட்டிற்கு முதல்வர் சென்று வந்தது. பின்னர் நரிக்குறவர் வீடுகளுக்கு சென்று காலை உணவு சாப்பிட்டது. நரிக்குறவ மாணவிகளோடு முதல்வர் பேசியது போன்ற பல விஷயங்கள் காரணமாக தமிழகம் முழுவதும் நரிக்குறவ மக்களுக்கு தனி மரியாதை கிடைத்து வருகிறது.
குறிப்பாக மாவட்ட நிர்வாகங்களும், இதர அரசுத்துறைகளும் நரிக்குறவ மக்களை சிறப்பு விருந்தினர் போல் நடத்த தொடங்கி உள்ளனர். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழா மே 10ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் வழக்கமாக நரிக்குறவ இன மக்கள் முல்லை பெரியாற்று பாலத்தில் (வழக்கமாக போடும் இடம் தான்) கடை போடுவார்கள். இந்த இடத்தில் இரண்டு பாலங்கள் உள்ளன. அதில் பழைய பாலத்தில் ஒரு பக்கம் கடை போடுவது வழக்கம்.
இந்த ஆண்டு கோயி்ல் நிர்வாகம் அந்த பாலம் முழுவதையும் அப்படியே ஒதுக்கி நரிக்குறவர் இன மக்களுக்கு கொடுத்து வி்ட்டது. பாலம் முழுக்க வேறு எந்த நபரின் ஆக்கிரமிப்பும் இன்றி இரண்டு பக்கமும் நரிக்குறவர் இன மக்களே கடை விரித்துள்ளனர். வழக்கத்தை விட ஏராளமானோர் கடை விரித்துள்ளனர். இவர்களுக்கு போலீசார் உட்பட யாரும் எந்த தொந்தரவும் தருவதில்லை. இப்படி ஒரு நிகழ்வு வீரபாண்டி திருவிழாவில் இது தான் முதல் முறை. இதற்கு தமிழக முதல்வர் இந்த இனத்தின் மீது காட்டும் தனிப்பட்ட பாசமே காரணம் என கோயில் அதிகாரிகளே தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu