தேனி மாவட்டத்தில் திராட்சை விலை வீழ்ச்சி
தேனி மாவட்டத்தில் கம்பம், கூடலுார், ஓடைப்பட்டி, ராயப்பன்பட்டி, அனுமந்தன்பட்டி உட்பட கம்பம், உத்தமபாளையம், சின்னமனுார் ஒன்றியங்களில் கருப்பு திராட்சை சாகுபடி அதிகளவில் நடைபெறுகிறது. தற்போது அறுவடை மும்முரமாக நடந்து வரும் நிலையில், விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. விவசாயிகளிடம் இருந்து விவசாயிகள் ஒரு கிலோ பழம் 15 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர்.
அதேபோல் சின்னவெங்காயம் முதல் ரகம் கிலோ 7 ரூபாய், 2ம் ரகம் கிலோ 5 ரூபாய்க்கு விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். தமிழகத்தின் பல பகுதிகளில் விளையும் அன்னாசிப்பழம் கிலோ 12 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர்.
இவற்றின் விலை வீழ்ச்சியால் வியாபாரிகளுக்கு மட்டுமே கூடுதல் பலன் கிடைக்கிறது. காரணம் 7 ரூபாய்க்கு கொள்முதல் செய்யும் சின்னவெங்காயத்தை, சந்தையில் 20 ரூபாய் முதல் 25 ரூபாய்க்கு விற்கின்றனர். திராட்சைப்பழம் கிலோ 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்கின்றனர். அன்னாசிப்பழமும் இதேபோல் பலமடங்கு கூடுதல் விலை வைத்து விற்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu