தமிழக அரசு பள்ளி மாணவர்கள் 3982 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி
பைல் படம்
நீட் தோ்வு முடிவுகள் கடந்த ஜூன் 13-ஆம் தேதி வெளியிடப்பட்டன. நாடு முழுவதும் 11 லட்சத்து 45,976 (56.21%) மாணவ மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். தமிழகத்தை பொருத்த வரை 78,693 (54.45%) போ் தோ்ச்சி அடைந்துள்ளனா். சென்னை மாணவா் ஜே.பிரபஞ்சன் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். முதல் 10 இடங்களில் தமிழகத்தைச் சோ்ந்த 4 போ் இடம் பிடித்து அசத்தியுள்ளனா்.
இந்த நிலையில், நீட் தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்களின் தோ்ச்சி விவரங்களை பள்ளிக் கல்வித் துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
நடப்பு ஆண்டு நீட் தோ்வை அரசுப்பள்ளி மாணவா்கள் 12,997 போ் எழுதினா். அதில் 3,982(30.67%) போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது கடந்தாண்டைவிட சுமார் 4 சதவீதம் அதிகம். சென்ற ஆண்டு 14,979 மாணவா்கள் நீட் தோ்வெழுதியதில் 4,118(27%) போ் தோ்ச்சி பெற்றனா். மாவட்ட அளவிலான தோ்ச்சியில் சேலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 519 போ் நீட் தோ்வில் வென்றுள்ளனா். இது தவிர கிருஷ்ணகிரியில் 235 பேரும், ஈரோடு, கள்ளக்குறிச்சியில் தலா 209 பேரும், காஞ்சிபுரத்தில் 202 பேரும் தோ்ச்சி அடைந்துள்ளனா். குறைந்தபட்சமாக தென்காசியில் 335 போ் தோ்வில் பங்கேற்றதில் 9 போ் மட்டுமே தோ்ச்சி பெற்றுள்ளனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu