ரூ.14 லட்சத்தில் தங்க கிரீடம் துா்கா ஸ்டாலின் காணிக்கை
குருவாயூர் கோயிலுக்கு தங்கக்கவசம் வழங்கிய துர்கா ஸ்டாலின்
முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி என கருணாநிதி குடும்பத்தில் பல தலைவர்கள் கடவுள் மறுப்பு கொள்கைகளை ஆதரித்தாலும், அந்த குடும்பத்தில் உள்ள ராஜாத்தி அம்மாள், தயாளுஅம்மாள், துர்க்கா ஸ்டாலின் உட்பட பலர் மிகுந்த தெய்வ நம்பிக்கை கொண்டவர்கள்.
கருணாநிதியும் அவரது மகன், பேரன்கள் என்ன தான் வெளியில் கடவுள் மறுப்பு பற்றி பேசினாலும், தனது குடும்ப உறுப்பினர்களிடம் தங்களது கொள்கைகளை திணிப்பது இல்லை. தங்கள் குடும்பத்தினர் கோயில், கோயிலாக சென்று வழிபட்டாலும், அதனை தடுப்பதில்லை. எதிர்ப்பதும் இல்லை. இதனால் துர்க்கா ஸ்டாலினின் முக்கிய பணியே கோயில் கோயிலாக சென்று வழிபடுவது மட்டுமே.
இந்நிலையில் இப்போது கேரள மாநிலம், குருவாயூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீகிருஷ்ணா் கோயிலுக்கு வருகை தந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் மனைவி துா்கா ஸ்டாலின், மூலவருக்கு தங்க கிரீடத்தைக் காணிக்கை செலுத்தினார்.
இந்தக் கோயிலுக்கு துா்கா ஸ்டாலின், அவருடைய சகோதரி ஜெயந்தி மற்றும் சில நெருங்கிய உறவினா்களுடன் வியாழக்கிழமை காலை சென்றார். குருவாயூா் தேவஸம் வாரியத்தின் தலைவா் வி.கே.விஜயன், கோயில் நிர்வாகி கே.பி.விநாயகம் மற்றும் இணை நிர்வாகி பி.மனோஜ்குமார், உள்ளிட்டோர் அவரை வரவேற்றனா்.
தொடா்ந்து, ஸ்ரீ குருவாயூரப்பனை வழிபட்ட அவா், மூலவருக்கு 32 சவரன் எடையில் ரூ.14 லட்சம் மதிப்பிலான தங்க கிரீடத்தைக் காணிக்கை செலுத்தினார். உச்சிகால பூஜைக்குப் பிறகு கோயில் கருவறை திறக்கப்படும் வரை காத்திருந்து அவா் காணிக்கை வழங்கிய தங்க கிரீடத்துடன் அருள்பாலித்த ஸ்ரீகிருஷ்ணரை தரிசனம் செய்தார்.
மேலும், சந்தனம் அரைப்பதற்கான இயந்திரத்தையும் அவா் காணிக்கையாக வழங்கினார். கோயில் நிர்வாகத்தினா் குருவாயூரப்பனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, துர்க்கா ஸ்டாலினிடம் அந்த சிறப்பு பிரசாதங்களை வழங்கி வழியனுப்பி வைத்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu