ஓ.பி.ரவீந்திரநாத் தோட்டத்தில் சிறுத்தை உயிரிழப்பு: ஆடு வளர்ப்போர் ஆர்ப்பாட்டம்

ஓ.பி.ரவீந்திரநாத் தோட்டத்தில் சிறுத்தை உயிரிழப்பு: ஆடு வளர்ப்போர் ஆர்ப்பாட்டம்
X

பைல் படம்.

ஓ.பி.ரவீந்திரநாத் தோட்டத்து மின்வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் வனத்துறையின் பாரபட்சமான நடவடிக்கையை கண்டித்து ஆடு வளர்ப்போர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா கோம்பை புதுப்பட்டியில் பெரிய தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 28ம் தேதி தேனி மாவட்ட வனஉதவி அலுவலர் மகேந்திரன் தலைமையிலான வனக்குழுவினர் சென்றனர். அப்போது மின்வேலியில் சிக்கிய சிறுத்தையை உயிருடன் மீட்டதாகவும், இதில் சிறுத்தை தாக்கி அதிகாரி மகேந்திரன் காயமடைந்ததாகவும் கூறி வனத்துறை காயமடைந்த படத்துடன் கூடிய தகவல் வெளியிட்டது.

அடுத்த இரண்டு நாட்களில் ஒரு சிறுத்தை இறந்து விட்டதாக கூறி ஒரு தகவல் வெளியிட்டது. சிறுத்தை பலியாக காரணம் எனக்கூறி அங்கு ஆட்டுக்கிடை அமைத்திருந்த ராமனாதபுரம் மாவட்ட ராமனாதபுரம் கடலாடியை சேர்ந்த ஆடு வளர்க்கும் அலெக்ஸ் பாண்டியனை கைது செய்தனர். இவர் சிறுத்தை இறந்த நேரத்தில் இங்கு கிடை அமைத்திருந்தார். இவர் கொன்றிருக்கலாம் என்ற புகார் கிளப்பட்டு இருந்தது. அடுத்து ரவீந்திரநாத்தின் தோட்டத்து மேலாளர்கள் இருவரை கைது செய்தனர்.

வனத்துறையின் இந்த நாடகத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இருந்து ஆடு வளர்ப்போர், தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். அலெக்ஸ் பாண்டியனை விடுதலை செய்ய வேண்டும் என்றும், உண்மைக்குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும், உதவி வன அலுவலர் மகேந்திரன் சிறுத்தையால் தாக்கப்பட்ட போது வனத்துறை எடுத்த வீடியோவை வெளியிட வேண்டும். இந்த வழக்கில் மாவட்ட கலெக்டர் முரளீதரன் நேரடியாக தலையிட்டு நீதி பெற்றுத்தர வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர், மாவட்ட வனஅலுவலகத்தையும் முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.

ஐந்து நாட்களுக்கு முன்னர் மின்வேலியில் சிக்கிய சிறுத்தையை வனத்துறையினர் காப்பாற்றும் போது அதிகாரி மகேந்திரன் காயமடைந்தார் என்ற தகவலை வெளியிட்டது. அப்போதே அந்த மின்வேலியில் மின் இணைப்பை துண்டித்திருக்க வேண்டும். அதனை செய்யாமல், இரண்டு நாள் கழித்து சிறுத்தை இறந்து விட்டது எனக்கூறி ஆடு வளர்ப்பவரை கைது செய்தனர். இந்த குழப்பத்தை தான் ஆடு வளர்ப்போர் கடுமையாக எதிர்க்கின்றனர்.

தோட்டத்துக்காரர் ஒருவர், மின்வேலி அமைத்தவரும் அவர் தான். அவர் அரசியல்வாதி என்பதால் அவரை விட்டு விட்டு, பகடைக்காயாக ஒரு அப்பாவியை பலியிடுவது எந்த வகை நியாயம் என கேள்வி எழுப்புகின்றனர். தவிர மின்வேலி அந்த தோட்டத்தில் இருப்பது தெரிந்தும் வனத்துறை அதனை அகற்ற நடவடிக்கை எடுக்காமல் இருந்தது ஏன் என்றும் கேள்வி எழுப்புகின்றனர். இந்த விஷயத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராடுவோம் என அறிவித்துள்ளதால், ஓ.பி.ஆர்.க்கு நாளுக்கு நாள் சிக்கல் வலுத்து வருகிறது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil