செல்போனிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்கும் வழிகள்
பைல் படம்
செல்போன் பயன் படுத்தாவிட்டாலும், செல்போன் கோபுரங்களின் கதிர் வீச்சும், பிறரின் பயன்பாட்டின் போதான கதிர் வீச்சும் நம்மை பாதிக்கவே செய்யும். மேலும், செல்போன் கதிர்வீச்சினால், நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது.
செல்போன் கதிர்வீச்சினால் மூளையில் இரண்டு வகையான (Gliomas, Acoustic neuromas) புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் செல்போன் உபயோகிப்பவர்களிடம் இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். ஆகவே நாம் செல்போன் உபயோகிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
நமது மூளை செயல்பாடுகள் மின்சாரத்தால் இயக்கப்படுகின்றன. மின்காந்த அலைகளான செல்போன் அலைகள், நமது உடலில் செயல்படும் மின்சாரத்துடன் இடையீடு செய்யும். இதனால் செல்போன் கோபுரங்கள் அருகே வாழும் மக்களுக்கு தலைவலி, வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதேநேரம், இதனால் புற்றுநோய் போன்ற பாதிப்புகள், ஏற்படுவதை உறுதிப்படுத்துவது போன்ற ஆராய்ச்சிகள் இன்னும் நடக்க வில்லை. செல்போன் கதிர்வீச்சு ஏற்படுத்தும் பாதிப்புகள் தொடர்பான ஆராய்ச்சிகள் ஏன் இதுவரை முறைப்படி நடத்தப்படவில்லை என்பதும் விவாதத்துக்குரியது.
செல்போன் கோபுரங்கள் அமைப்பதற்கான விதிமுறைகளை பல நாடுகள் கடுமையாக்கி உள்ளன. செல்போன் கோபுரங்களுக்கு அருகே வாழ்வது என்பது மைக்ரோவேவ் ஓவனுக்குள் நாம் வாழ்வதைப் போன்றது. மும்பையில் ஒரு மணி நேரத்துக்கு மேல் பயணிக்கும் ஒருவர், அதில் 90 சதவீத நேரம் கடுமையான கதிர்வீச்சை எதிர்கொள்கிறார். இன்றைய காலத்தில் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க முடியாது. அதேநேரம், செல்போனில் அதிக நேரம் பேசாதீர்கள். ஹாண்ட்ஸ் பிரீ கருவி அல்லது குறைந்த சத்தத்தில் வைத்து பேசுங்கள், நிலவழித் தொலைபேசியில் பேசுங்கள் என்று மருத்துவர்கள் ஆலோசனை தருகிறார்கள்
ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால், போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கலாம். குழந்தைகளிடம் செல்போனில் பேசுவதோ, கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது. உங்கள் செல்போனில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில் (Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம் இருக்கும். தூங்கும்போது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும். நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும்போது, அவர்கள் உங்கள் தொடர்பை attend செய்தவுடன் போனை காதருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம்.
ஏனென்றால், பேசும்போது ஏற்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் போது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது. செல்போனில் பேசும்போது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில்தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம். செல்போன்களை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.. செல்போனில் பேசும்போது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிவைத்து பேசக்கூடாது போன்ற விஷயங்களின் நாம் கவனமாக இருந்தால் நல்லது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu