மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
X
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கடலுார் மாவட்டம், பச்சை குப்பத்தை சேர்ந்தவர் தீனா, 19. உத்தமபாளையம் அம்மாபட்டியை சேர்ந்தவர் பரமேஸ்வரன், 26. இவர்கள் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளனர். கடந்த அக்டோபர் 22ம் தேதி இருவரையும் போலீசார் சின்னமனூர் பைபாஸ் ரோட்டில் வைத்து கைது செய்தனர்.

தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களை, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரே பரிந்துரை செய்தார். இதன்படி இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் முரளீதரன் உத்தரவிட்டார்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு