தேனி நகராட்சியில் வேலை வாங்கித்தருவதாக கூறி ஐந்தரை லட்சம் ரூபாய் மோசடி

தேனி நகராட்சியில் வேலை வாங்கித்தருவதாக கூறி ஐந்தரை லட்சம் ரூபாய் மோசடி
X
தேனி நகராட்சி அலுவலகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி, ஐந்தரை லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது கண்டமனுார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆண்டிபட்டி எரதிம்மக்காள்பட்டியை சேர்ந்தவர் வடிவேல். இவரிடம் இதே ஊரை சேர்ந்த சத்தியமூர்த்தி, எம்.சுப்புலாபுரத்தை சேர்ந்த பாலமுருகன், ஆகியோர் தேனி நகராட்சி அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் வேலை வாங்கித்தருவதாக கூறி ஐந்தரை லட்சம் ரூபாய் பணம் வாங்கி உள்ளனர்.

ஆனால் வேலை வாங்கித்தரவில்லை. இது குறித்து இவர்கள் கொடுத்த புகாரில் கண்டமனுார் போலீசார் சத்தியமூர்த்தி, பாலமுருகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!