தேனியில் வெவ்வேறு சம்பவங்களில் ஒரே நாளில் 4 பேர் தற்கொலை
![தேனியில் வெவ்வேறு சம்பவங்களில் ஒரே நாளில் 4 பேர் தற்கொலை தேனியில் வெவ்வேறு சம்பவங்களில் ஒரே நாளில் 4 பேர் தற்கொலை](https://www.nativenews.in/h-upload/2022/03/21/1500802-202110200135255400suicidesecvpf.gif)
பைல் படம்.
மயிலாடும்பாறை தென்பழனியை சேர்ந்தவர் ராஜா, 43. இவருக்கும், இவரது மனைவி செல்விக்கும், 36 திருமணம் ஆகி10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இந்த ஏக்கத்தில் வருத்தமாக இருந்த ராஜா, தனியாரது தோட்டத்தில் வேலைக்கு சென்ற இடத்தில் விஷம் குடித்து இறந்து விட்டார். கடமலைக்குண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியகுளம் வடகரையை சேர்ந்தவர் சிவனாண்டி, 26. இவர் தனியார் தோட்டத்தில் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில் வேலைசெய்யும் இடத்திலேயே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். பெரியகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலுார் கன்னிகாளிபுரத்தை சேர்ந்தவர் மதனமணி, 25. இவர் ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வந்தார். இவரது தந்தை இறந்து 8 வருடங்கள் ஆகிறது. அம்மா கூலி வேலைக்கு சென்று வருகிறார். அண்ணன் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மதனமணி வீட்டில் டூ வீலர் கேட்டுள்ளார். யாரும் வாங்கித்தராததால் மனம் உடைந்து விஷம் குடித்தார். கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். கம்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிபட்டி டி.பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஸ்ரீநிதி, 20. மூன்றாம் ஆண்டு கல்லுாரி மாணவியான இவர், விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்தார். பக்கத்து தோட்டத்திற்கு படிக்க சென்ற இவர், துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகப்பட்டு உறவினர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முன்பு மறியல் செய்தனர். எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரே பேச்சு வார்த்தை நடத்தி, மாணவியின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu