தேனி அருகே கடன் கொடுத்த பணத்திற்காக மனைவியை பயன்படுத்தியவர் கொலை

தேனி அருகே கடன் கொடுத்த பணத்திற்காக  மனைவியை பயன்படுத்தியவர் கொலை
X
தேனி அருகே கம்பத்தில் பணம் கொடுத்த நபர், வட்டி பணத்திற்கு பதிலாக கடன் பெற்றவரின் மனைவியை பயன்படுத்தியதால் கொல்லப்பட்டார்.

தேனி மாவட்டம், கம்பம் கூலத்தேவர் சந்திப்பில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தவர் பிரகாஷ் (வயது 37.) இதே பகுதியில் வசிக்கும் ஆட்டோ டிரைவர் வினோத்குமார்,( 34.) இவரது மனைவி நித்யா,( 22.) வினோத்குமார் விபத்தில் சிக்கி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் பிரகாஷ் அவருக்கு ஆட்டோ வாங்க பணம் கொடுத்துள்ளார். இப்படி பணம் கொடுத்து அவருடன் நட்பான பிரகாஷ், ஆட்டோ டிரைவரின் மனைவியுடன் தொடர்பில் இருந்துள்ளார். ஆட்டோ டிரைவர் வாங்கிய கடனுக்கு வட்டிக்கு பதிலாக அவரது மனைவியை பிரகாஷ் பயன்படுத்தி வந்துள்ளார். இதனை அறிந்த ஆட்டோ டிரைவர் பிரகாஷை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளார்.

பிரகாஷை வழக்கம் போல் தனது வீட்டிற்கு அழைத்து, மது வாங்கி கொடுத்து அவருக்கு போதை ஏறியதும், ஆட்டோ டிரைவரும், அவரது மனைவியும் சேர்ந்து பிரகாஷை கொலை செய்தனர். பின்னர் ஆட்டோடிரைவர் ரமேஷ் உதவியுடன் அவரது உடலை உத்தமபாளையம் முல்லைப்பெரியாற்றில் வீசி உள்ளனர். தற்போது கம்பம் தெற்கு இன்ஸ்பெக்டர் லாவண்யா வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் வினோத்குமார், அவரது மனைவி நித்யா, அவரது நண்பர் ரமேஷ் ஆகியோரை கைது செய்தார். தீயணைப்பு படையினர், ஆற்றில் வீசப்பட்ட பிரகாஷ் உடலை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்