இழந்த இடுக்கியை மீண்டும் பெற நாளை மறுநாள் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

இழந்த இடுக்கியை மீண்டும் பெற நாளை மறுநாள் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X
பைல் படம்.
தமிழகம் இழந்த இடுக்கி மாவட்டத்தை மீண்டும் தமிழகத்துடன் சேர்க்க வலியறுத்தி நாளை மறுநாள் விவசாயிகளின் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

முல்லை பெரியாறு அணை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண தமிழகத்தில் இருந்து கேரளாவுடன் இணைக்கப்பட்ட இடுக்கி மாவட்டத்தை மீண்டும் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

இது குறித்து முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கம், முல்லை பெரியாறு பாசன மற்றும் குடிநீர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் கொடியரசன், சதீஷ் ஆகியோர் கூறுகையில், முல்லை பெரியாறு அணை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமானால், 1956ம் ஆண்டு தமிழகத்தில் இருந்து பிரிக்கப்பட்டு கேரளாவுடன் இணைக்கப்பட்ட இடுக்கி மாவட்டத்தை மீண்டும் தமிழகத்துடன் இணைக்க வேண்டும்.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடுக்கி மாவட்டத்தின் பீர்மேடு, தேவிகுளம் தாலுகாக்கள் தமிழகத்துடன் இணைக்கப்பட்டு விட்டால் முல்லை பெரியாறு அணை தமிழக எல்லைக்குள் வந்துவிடும். பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக இது மட்டுமே அமையும்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாளை மறுநாள் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு கூடலுார் புதிய பஸ்ஸ்டாண்ட் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தனர்.

அமைச்சர் துரைமுருகன் நாளை முல்லை பெரியாறு அணைக்கு வரவுள்ள நிலையில், விவசாயிகளின் இந்த அறிவிப்பு தேனி மாவட்ட நிர்வாகத்தை டென்சனுக்கு உள்ளாக்கியுள்ளது. இதனால் லோயர்கேம்ப் தமிழக எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!