உழவன் செயலியை பயன்படுத்துங்கள்: தேனி விவசாயிகளுக்கு வேண்டுகோள்

உழவன் செயலியை பயன்படுத்துங்கள்:  தேனி விவசாயிகளுக்கு வேண்டுகோள்
X

பைல் படம்

தேனி மாவட்ட விவசாயிகள் உழவன் ஆப்பினை பயன்படுத்தினால் மட்டுமே போதும், விவசாய த்துறை அதிகாரிகள் தேடி வருவார்கள்

தேனி மாவட்ட விவசாயிகள் உழவன் ஆப்பினை பயன்படுத்தினால் மட்டுமே போதும், விவசாயத்துறை அதிகாரிகள் தேடி வருவார்கள், விவசாயிகள் யாரையும் தேட வேண்டியதில்லை என தேனி வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது: வேளாண்மைத்துறை மூலம் உழவன் செயலி பயன்பாட்டில் உள்ளது. இந்த உழவன் செயலி மூலம் விவசாயிகள் அரசின் மானிய திட்டங்கள், இடுபொருள்கள் முன்திவு விவரம், பயிர்காப்பீடு விவரம், உரங்கள் இருப்பு விவரம், விதை இருப்பு விவரம், வேளாண் எந்திரங்கள் வாடகைக்கு எடுத்தல், சந்தை விலை நிலவரம், வானிலை முன் அறிவிப்பு, உதவி வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளின் தினசரி சுற்றுப்பயண விவரம், பண்ணை வழிகாட்டி, இயற்கை பண்ணைய பொருட்கள் உட்பட 15 மேற்பட்ட பயன்பாடுகளை தெரிந்து கொள்ளலாம்.

தங்களுக்கு எந்த திட்டத்தில் பயன் வேண்டுமோ அந்த திட்டத்தில் விண்ணப்பங்களை உழவன் செயலி மூலமே அனுப்பி வைக்கலாம். இந்த செயலி மூலம் வந்த விண்ணப்பங்களை பார்த்து, வேளாண்மைத்துறை அதிகாரிகள் வீடு தேடி வந்து விவசாயிகளை சந்தித்து திட்ட பயன்களை பெற உதவுவார்கள். இதன் மூலம் விவசாயிகளின் அலைச்சல் குறையும். இதுவரை இந்த செயலியை தேனி மாவட்டத்தில் பல லட்சம் விவசாயிகள் பதிவிறக்கம் செய்துள்ளனர். இதனை பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கு அலைச்சல், நேரம், பணம் உட்பட அத்தனையும் மீதமாகும். இவ்வாறு கூறினர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil