உரத்திற்கு அதிக விலை கொடுக்காதீர்கள்: தேனி வேளாண்மை இணை இயக்குனர் தகவல்

உரத்திற்கு அதிக விலை கொடுக்காதீர்கள்:   தேனி வேளாண்மை இணை இயக்குனர் தகவல்
X

காட்சி படம்

தேனி மாவட்டத்தில் போதிய அளவு உரம் கையிருப்பு இருப்பதால் விவசாயிகள் அதிக விலை கொடுத்து உரம் வாங்க வேண்டியதில்லை என வேளாண்மைத்துறை அறிவித்துள்ளது

தேனி வேளாண்மை இணை இயக்குனர் அழகுநாகேந்திரன் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் 222 தனியார் உரக்கடைகள், 73 வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் உரங்கள் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.

முதல் போக சாகுபடிக்கு தேவையான அளவு உரங்கள் அனைத்து இடங்களிலும் கையிருப்பில் உள்ளது. தற்போதைய நிலையில் 1196 டன் யூரியா, 352 டன் டிஏபி கலப்பு உரம், 465 டன் பொட்டாசியம், 2325 டன் காம்ப்ளக்ஸ் உரம் என மொத்தம் 4,338 டன் உரம் இருப்பு உள்ளது.

இந்த மாதம் கூடுதலாக 2470 டன் உரம் வந்து சேரும். எனவே உரம் போதுமான அளவு உள்ளது.

விவசாயிகள் உரத்திற்காக எங்குமே கூடுதல் விலை கொடுக்க வேண்டாம். அப்படி யாராவது கூடுதல் விலை கேட்டால், 9894947952 என்ற நம்பரில் புகார் செய்யலாம் என கூறியுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!