அரசு அலுவலகங்களிலும் சுரண்டப்படும் மனித உழைப்பு

அரசு அலுவலகங்களிலும் சுரண்டப்படும்  மனித உழைப்பு
X
மத்திய, மாநில அரசு அலுவலகங்களிலும் பல லட்சம் பேரின் உழைப்பு தினமும் சுரண்டப்படும் அவலம் தொடர்கிறது.

தனியார் அலுவலகங்களில் தினமும் சில நுாறு ரூபாய் மட்டும் அதாவது 200 ரூபாய் அல்லது 250 ரூபாய் மட்டும் சம்பளம் கொடுத்து விட்டு 10 மணி நேரம், 12 மணி நேரம் வேலை வாங்குவது வாடிக்கை. இது காலம், காலமாக தொடர்கிறது. இதனால் விமர்சனங்கள் எழுந்தாலும் தீர்வு கிடைக்கவில்லை.

அதுவும் மெட்ரிக் பள்ளிகள், நகைக்கடைகள், மில்கள், ஜவுளிக்கடைகள், டீக்கடைகள், பேக்கரிகள், பலசரக்கு கடைகள், பெட்ரோல் பங்க்குகள், ஓட்டல்கள் ஏன் மருத்துவமனைகளில் பணிபுரியும் பணியாளர்கள் கூட இந்த 10 மணி நேரமும் உட்கார நேரம் கிடைக்காது. வேலையில்லாத நேரங்களில் கூட அவர்கள் உட்கார அனுமதியில்லை. இவ்வளவு மனித உரிமை மீறல்களும் நடக்கத்தான் செய்கின்றனர். சில தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையும் நிலவத்தான் செய்கிறது. இத்தனை நெருக்கடியினையும் கடந்து அவர்கள் வாழ்க்கை நடத்த வேலை செய்து கொண்டு தான் உள்ளனர்.

தனியாரில் தான் இந்த சிக்கல் என்றால், அரசுத்துறைகளிலும் இப்படிப்பட்ட உழைப்பு சுரண்டல் அதிகரித்து வருகிறது. துப்பரவு பணிகளை தயார்மயமாக்குகிறோம் எனக்கூறி உள்ளாட்சிகளில் தனியார்களிடம் ஒப்படைக்கின்றனர். அவர்கள் ஒரு பணியாளருக்கு இவ்வளவு என அரசிடம் வாங்கும் பணத்தில் பாதியை கூட அந்த பணியாளருக்கு தருவதில்லை. கொசு மருந்து தெளிக்கும் பணியாளர் ஒவ்வொருவருக்கும் நிர்ணயித்த சம்பளத்தை விட 50 ரூபாய் முதல் 100 ரூபாய் குறைவாகத்தான் தருகின்றனர்.

மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் கூட்டும் பணியாளர்களுக்கு தினமும் சம்பளம் 250 ரூபாய்க்கும் குறைவு தான். இவர்கள் காலையில் 9 மணிக்கு வந்து விட வேண்டும். இரவு 8 மணி அல்லது 9 மணி வரை பணிபுரிய வேண்டும். கூட்டுவது, பாத்ரூம் கழுவுவது, அத்தனை பேருக்கும் தினமும் பலமுறை டீ, வடை வாங்கித்தருவது உட்பட அத்தனை வேலைகளையும் இவர்கள் தான் செய்ய வேண்டும்.

இந்த வேலைகளை செய்வது தவறு என சொல்லவில்லை. இதற்கான சம்பளத்தை முறையாக அரசே வழங்க மறுத்தால், தனியார்கள் எப்படி தருவார்கள். தனியார்களிடம் எப்படி நியாயம் பெற முடியும் என்பது தான் தற்போது எழுந்துள்ள கேள்வி. துப்புரவு பணி மட்டுமல்ல, டிரைவர், கார், இதர அரசு பணிகள் கூட ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டு உழைப்பு சுரண்டல் நடக்கிறது என்பது தான் வேதனையான விஷயம். இதேபோல் பல்வேறு வகை பணிகளுக்கும் மத்திய, மாநில அரசுத்துறைகளி்ல் மிக, மிக குறைந்த சம்பளம் வழங்கி வருகின்றனர் என்பதை மறுக்க முடியவில்லை.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!