எடை குறைக்கஎன்ன தான் வழி... தலையைப் பிய்த்துக்கொள்ளும் மனிதர்கள்

எடை குறைக்கஎன்ன தான் வழி...  தலையைப் பிய்த்துக்கொள்ளும் மனிதர்கள்
X

பைல் படம்

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஃபிட்டாக இருக்க விரும்புகிறார்கள்.

ஏனெனில் உடல் பருமனாக இருப்பதால் பல நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது. உடல் எடை அதிகரித்தால், அதனால் பல வித உடல் நல குறைபாடுகள் ஏற்படுகின்றன. உடல் எடையை குறைக்க பலரும் பல வித முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, ஜிம் என பல வழிகளில் எடையை குறைக்க மக்கள் முயற்சிகள் எடுக்கப்படுகின்றனர்.

தினம் தினம் அதிகரிக்கும் உடல் எடையை குறைப்பது மிக கடினமான விஷயமாக மாறி விட்டது. பல வித முயற்சிகளை எடுத்தும் உடல் பருமனை கட்டுப்படுத்த முடியாதவர்களுக்கு இது ஒரு பெரிய டென்ஷனாகவே மாறி விடுகின்றது. ஆனால், இது அத்தனை கடினமான விஷயமும் அல்ல. சில எளிய வழிமுறைகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலமும் உடல் எடையை குறைக்க முடியும்.

சில பழக்கவழக்கங்களை தினமும் பின்பற்றினால், உங்கள் உடல் எடை வேகமாகக் குறையத் தொடங்கும். உங்கள் உடல் எடை அதிகமாக இருந்தால், தொப்பை தினமும் பெரிதாகிக்கொண்டே இருந்தால், இவற்றை நீங்கள் பின்பற்றலாம். இது அதிகரிக்கும் உங்கள் எடைக்கு ஆரோக்கியமான வழியில் முற்றுப்புள்ளி வைக்கும். உடல் எடையை குறைக்க பெரிய வழியில் உதவும் சில எளிய காலை வழக்கங்கள் பற்றி இங்கே காணலாம்.

எடை இழப்புக்கான காலை பழக்கங்கள்: போதுமான அளவு உறக்கம். தினமும் அதிகாலையில் எழுவது ஒரு நல்ல பழக்கம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் இரவில் தாமதமாக தூங்கி, அதிகாலையில் எழுந்தால், குறைவான தூக்கம் காரணமாக, உங்கள் எடை அதிகரிக்கத் தொடங்குகிறது. இதன் காரணமாக எடை குறைப்பதில் சிக்கல்கள் தொடங்குகின்றன. ஆகையால், உடல் எடையை குறைக்க வேண்டுமானால், கண்டிப்பாக இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலையில் சீக்கிரம் எழுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

வெதுவெதுப்பான நீருடன் நாளைத் தொடங்குங்கள். தினமும் காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால், கொழுப்பை எரிப்பது எளிதாகும். நீங்கள் விரும்பினால், தனியா தண்ணீர், தேன் மற்றும் எலுமிச்சை நீர் அல்லது சீரக நீர் ஆகியவற்றை உட்கொண்டு உங்கள் நாளைத் தொடங்கலாம்.

நார்ச்சத்து நிறைந்த காலை உணவு: நார்ச்சத்து நிறைந்த காலை உணவுகளான அவல், உப்மா, முட்டை ஆம்லெட், சீலா, ஜவ்வரிசி உப்புமா, கஞ்சி, ஓட்ஸ், ஸ்டஃப்டு பராத்தா, ஃப்ரூட் சாலட், ஜூஸ் போன்றவற்றைச் சாப்பிடுவது நல்லது, நார்ச்சத்து நிறைந்த உணவுகள் நீண்ட நேரம் நிரம்பிய உணர்வைத் தரும். அதன் காரணமாக அதிகம் சாப்பிடுவதையும், ஆரோக்கியமற்ற தேவையற்ற உணவுகளை உட்கொள்வதையும் தவிர்க்கலாம். இதனுடன், நீங்கள் நாள் முழுவதும் போதுமான ஆற்றலையும் பெற்று புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.

கறிவேப்பிலைச் சாறு: உடல் எடையைக் குறைக்க கறிவேப்பிலைச் சாறு அருந்தலாம். வெறும் வயிற்றில் கறிவேப்பிலைச் சாற்றைக் குடித்தால், அதில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க வைக்கும். இதனால் அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். அதன் பண்புகள் அதிகப்படியான கொழுப்பு மற்றும் நச்சுகளை அகற்ற உதவுகிறது.

Tags

Next Story
ai in future agriculture