பாஜகவோடு கூட்டணி இல்லை என்பதை மக்களிடம் எடுத்து சொல்லுங்கள்: இபிஎஸ்

பாஜகவோடு கூட்டணி இல்லை என்பதை  மக்களிடம் எடுத்து சொல்லுங்கள்: இபிஎஸ்
X

பைல் படம்

பா.ஜ.க. வுடன் கூட்டணி இல்லை என்று மக்களிடம் அழுத்தமாக எடுத்துச் சொல்லுங்கள் என கட்சி நிர்வாகிகளிடம் இ.பி.எஸ் தெரிவித்தார்

அ.தி.மு.க.- பா.ஜ.க. உறவு முறிந்ததை தொடர்ந்து பா.ஜ.க., தரப்பில் தொடர்ந்து அசாத்திய மவுனம் நீடித்து வருகிறது. அ.தி.மு.க. தரப்பில் சற்று மவுனமாக இருந்து வந்த இ.பி.எஸ்., தற்போது மீண்டும் கூட்டணி முறிவு பற்றி பேசியுள்ளனார். கூட்டணி முறிந்தது முறிந்தது தான். இனி எப்போதும் ஒட்டும் இல்லை. உறவும் இல்லை. இது பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள் என அ.தி.மு.க. தொண்டர்களுக்கு அவர் அறிவுறுத்தி உள்ளார்.

அதிமுகவின் 52ஆவது ஆண்டு விழாவை ஒட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் பேசிய அவர் , மாவட்ட செயலாளர்களுக்கு அஞ்சி, அவர்கள் சொல்படி நடப்பதை விட்டு, கட்சிக்காக, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தேர்தல் பொறுப்பாளர் களின் பணிகளையும் கட்சி தலைமை நிர்வாகிகள் கண்காணிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அதிமுகவினருக்கு இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். திமுக உடனான கூட்டணி இல்லை என்பதை மீண்டும் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளது தற்போதைய அரசியல் களத்திலும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

Tags

Next Story
சிறுநீரகத்துல நச்சுக்கள் இருக்கா ?..உடனே வெளியேற்ற இந்த சில பழங்கள சாப்டுங்க..!| Best fruits for kidney cleansing naturally in tamil