ஆண்டிபட்டி அருகே வீடு புகுந்து மீண்டும் நகை, பணம் திருட்டு

ஆண்டிபட்டி அருகே வீடு புகுந்து மீண்டும்  நகை, பணம் திருட்டு
X
ஆண்டிபட்டி அருகே பூட்டியிருந்த வீட்டில் மீண்டும் நகை, பணம் திருட்டு போனது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணை, க.விலக்கு பகுதியில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. அதேபோல் மாவட்டத்தில் சில இடங்களில் திருட்டு சம்பவங்களும் நடந்தன. போலீசார் திருட்டு கும்பலை பிடிக்க வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இரவு ரோந்து பணியினை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில், ஆண்டிபட்டி பிச்சம்பட்டியில் வடிவேல்- முத்தம்மாள் தம்பதியினர் வசித்த வீட்டில் ஐந்து பவுன் நகை, ஆறு ஆயிரம் ரூபாய் பணம் திருட்டு போய் உள்ளது. ராஜதானி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி