போதுமான மழை இல்லாததால் சரிகிறது வைகை அணை நீர்மட்டம்

போதுமான மழை இல்லாததால்   சரிகிறது வைகை அணை நீர்மட்டம்
X
Dam Water Level Today -முல்லைப்பெரியாறு அணையில் நேற்று 10.6 மி.மீ., மழை பெய்தது. வைகை அணை நீர் மட்டம் சரிந்து வருகிறது.

Dam Water Level Today - கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும், இதுவரை குறிப்பிடும் படியாக பெய்யவில்லை. எங்குமே மழைப்பொழிவு இல்லை. அவ்வப்போது மட்டும் சிறிய அளவில் மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டத்தில் ஏதாவது ஒரு இடத்தில் லேசான சாரல் மட்டும் இருந்து வருகிறது. தேனி மாவட்டத்திலும் பலத்த மழை எங்குமே பெய்யவில்லை.

நேற்று முல்லைப்பெரியாறு அணையில் 10.6 மி.மீ., தேக்கடியில் 7 மி.மீ., மழை பெய்தது. தேனி மாவட்டத்தில் எங்குமே மழை பதிவாகவில்லை. அணைக்கு பெரிய அளவி்ல நீர் வரத்தும் இல்லை. விநாடிக்கு 147 கனஅடி நீர் மட்டுமே வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 600 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர் மட்டம் 129.95 அடியாக உள்ளது. வைகை அணை நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. வைகை அணைக்கு விநாடிக்கு 276 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 869 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர் மட்டம் கிடுகிடுவென சரிந்து இன்று காலை 55.28 அடியாக குறைந்தது.

கடந்த ஓராண்டாக 69 அடியாக நீர் மட்டம் நிலைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மழை இல்லாமல் நீர் வரத்து குறைந்து நீர் மட்டம் சரிந்து வருவது விவசாயிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்