இரட்டை இலை மீண்டும் முடக்கம் ? அதிமுகவை உடைக்கும் ‘மாஜி’க்கள்

இரட்டை இலை மீண்டும் முடக்கம் ?  அதிமுகவை உடைக்கும் ‘மாஜி’க்கள்
X

பைல் படம்

கூட்டணி முறிவால் அதிருப்தியில் இருக்கும் சில மாஜிக்கள், கட்சியை உடைத்து, மீண்டும் இரட்டை இலையை முடக்க தயாராகி வருகின்றனர்.

அதிமுக பாஜக மோதல் காரணமாக அதிமுக கட்சிக்குள் இருக்கும் சில சீனியர்கள் கடும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் சிலர்.. கடினமான முடிவுகளை, கசப்பான முடிவுகளை எடுக்கும் எண்ணத்தில் இருப்பதாகவும் தெரிகிறது. அதிமுக - பாஜக மோதலை பெரும்பாலான அதிமுக தொண்டர்கள் வரவேற்றுள்ளனர்.

இவர்களின் கூட்டணி முறிவை பெரும்பாலான அதிமுக தொண்டர்கள் பாராட்டி வரவேற்று உள்ளனர். பெரும்பாலான தொண்டர்கள். பாஜகவுடன் கூட்டணி இருந்தது தவறான முடிவு. அதனால் நாம் தோல்வி அடைந்தோம். இனி பிரச்சனை இல்லை. இனி அதிமுக பழைய நிலைமைக்கு வரும். மீண்டும் அதிமுக வெற்றிகளை பதிவு செய்யும். அதிமுக வெற்றிப்பாதைக்கு திரும்பும் என்று அதிமுக தொண்டர்கள் பலர் தெரிவிக்கின்றனர்.

தொண்டர்கள் பெரும்பாலும் இதை ஒரு மனதாக ஏற்று இருந்தாலும் கூட மேலே இருக்கும் அதிமுக தலைவர்கள் இதை ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளவில்லை. அதிமுகவில் ஒரு தரப்பினர் இதை பெரிதாக கொண்டாடுகிறார்கள். அதாவது மாஜி அமைச்சர்கள் 5-6 பேர் இதை கொண்டாடி வருகிறார்கள். பாஜகவுடன் இல்லாதது நல்லது. இனி நாம் தேர்தலில் ஜெயிக்கலாம். இரண்டு தேர்தலில் நாம் தோல்வி அடைய காரணமே பாஜகவின் கூட்டணி தான். இனி அந்த பிரச்சனை இருக்காது .

இப்படி சொல்பவர்கள் தான் கூட்டணி முறிய காரணமாக அமைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது கூட்டணியை முறித்துக் கொள்ளுங்கள் என்று இவர்களும் ஒரு பக்கம் அழுத்தம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு பக்கம் இதை சில மாஜி அமைச்சர்கள்.. முக்கியமாக 3 மாஜி அமைச்சர்கள் இதை கடுமையாக எதிர்கிறார்களாம். எந்த தைரியம் இருந்தால் பாஜக கூட்டணியை முறிப்பீர்கள். ரெய்டு வந்தால் நீங்கள் நிறுத்துவீர்களா? கூட்டணி உடைப்பால் நாங்கள் ஜெயிலுக்கு போனால் நீங்கள் வெளியே எடுப்பீர்களா? என்று வெளிப்படையாகவே கேட்க தொடங்கி விட்டனராம்.

அந்த குழுவில் ஒருவர்தான் கட்சியை உடைக்கும் எண்ணத்தில் இருப்பதாகவும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. அதாவது ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவை உடைத்து பாஜகவுடன் கூட்டணி வைத்தது போல தற்போது அ.தி.மு.க.,வில் உள்ள ஐவர் அதிமுகவை உடைத்து பாஜகவுடன் கூட்டணி வைக்கும் எண்ணத்தில் இருக்கிறாராம்.

அதாவது அதிமுகவை உடைப்பது.. உடைந்த அணியில் ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரனை சேர்ப்பது இதன் மூலம் தனி அதிமுக அணியை உருவாக்கி., பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களை தன் பக்கம் கொண்டு வந்து.. கடைசியில் கட்சியை சட்ட ரீதியாக பிரிப்பது., அல்லது சின்னத்தை முடக்குவது என்ற திட்டத்தில் இருக்கிறாராம்.

சின்னம் இருப்பதால் தான் எடப்பாடி ஆடுகிறார்.. அது இனி நடக்காது என்ற முனைப்பில் அவர் இருக்கிறாராம். ஆனால் எடப்பாடி ஜெ மறைவிற்கு பின் பல ரெய்டுகளை பார்த்தவர்.. டெல்லி பிரஷரை பார்த்தவர்.. சசிகலாவையே ஓரம் கட்டியவர். அவருக்கு கூட இருந்தே குழி பறிக்கும் இவர்களை பற்றி தெரியாமலா இருக்கும் என்கிறார்கள் அ.தி.மு.க., வட்டாரத்தினர்.

இதெல்லாம் எங்களுக்கு தெரியும். இவர்களுக்கு பதிலடி கொடுக்க .. இவர்களின் சூழ்ச்சியை முறிக்க ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி சில பிளான் பிகளை வைத்துள்ளார். அவர்கள் காய் நகர்த்துக்களையும் எடப்பாடி அதற்கு பதிலடி கொடுப்பார் என்கிறார்கள்.. அவருக்கு நெருக்கமான "நெடுஞ்சாலை" வாசிகள்!

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!