''பதவியை தக்க வைக்க ஜனநாயக படுகொலை செய்யாதீர்கள்'' : வழக்கறிஞர் செல்வம் ஆவேசம்

பதவியை தக்க வைக்க ஜனநாயக படுகொலை செய்யாதீர்கள் : வழக்கறிஞர் செல்வம் ஆவேசம்
X

தேனி நகராட்சி துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் செல்வம். *சால்வையுடன் இருப்பவர்)

‘உங்கள் பதவியை தக்க வைக்க ஜனநாயக படுகொலை செய்யாதீர்கள்’ என வழக்கறிஞர் செல்வம் கொந்தளித்தார்.

தேனியில் நகராட்சி தலைவர் பதவியை தி.மு.க., காங்., கட்சிக்கு விட்டுக் கொடுப்பது தொடர்பான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இதில் நகராட்சி தலைவர் பதவியை விட்டுக் கொடுத்தால் எனக்கு என்ன செய்வீர்கள் என நகர செயலாளர் பாலமுருகன் கேட்டார்.

அதற்கு பதிலளித்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட தலைவர்கள், 'நீங்கள் வேண்டுமானால் நகராட்சி துணைத்தலைவராக இருங்கள்' என்றனர். அதற்கு பாலமுருகன், 'தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் செல்வம் ஒத்துக் கொள்வாரா?' என கேள்வி எழுப்பினார்.

அவர்கள் நாங்கள் செல்வத்தை சம்மதிக்க வைக்கிறோம் என்றனர். இதனை கேட்ட செல்வம், 'நான் கட்சி அறிவித்து முறைப்படி தேர்வு செய்யப்பட்டவன். எனக்கும், தற்போது நடக்கும் குழப்பத்திற்குள் எந்த சம்மந்தமும் இல்லை. பாலமுருகனை காப்பாற்றவும், உங்கள் பதவிகளை தக்க வைத்துக் கொள்ளவும் என்னை பலியிடாதீர்கள்... ஜனநாயக படுகொலை செய்யாதீர்கள்' என கொந்தளித்தார்.

இதனை கேட்ட பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட தலைவர்கள் செய்வதறியாது திகைத்தனர். இன்றும் பேச்சு வார்த்தை தொடர்கிறது. நொடிக்கு நொடி பேச்சு வார்த்தையில் சூடு கிளம்பி வருகிறது.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!