தேனி நகராட்சியில் 32வது வார்டினை கைப்பற்றியது தி.மு.க

தேனி நகராட்சியில்  32வது வார்டினை கைப்பற்றியது தி.மு.க
X

தேனி நகராட்சி முப்பத்தி இரண்டாவது வார்டில் வென்ற தி.மு.க., வி.ஐ.பி., வேட்பாளர் வழக்கறிஞர் செல்வம்.

தேனி நகராட்சி 32வது வார்டினை தி.மு.க., கைப்பற்றி உள்ளது.

தேனி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் 32வது வார்டில் தொடர்ந்து அ.தி.மு.க., வெற்றி பெற்று வந்தது. இந்த முறை இந்த வார்டினை கைப்பற்ற வேண்டும் என திட்டமிட்டு தி.மு.க., தனது வி.ஐ.பி., வேட்பாளரான வழக்கறிஞர் செல்வத்தை களம் இறக்கியது.

செல்வமும் வார்டு மக்களின் குறைகளை துல்லிமாக அறிந்து அதனை தீர்க்க தேவையான திட்டங்களை தீட்டி மக்களிடம் சென்று தீர்த்து வைப்பதாக உறுதி அளித்தார். அமைச்சர் பெரியசாமி, வடக்கு மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்செல்வன், பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., மூக்கையா, நகர செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட அத்தனை தி.மு.க., முக்கிய வி.ஐ.பி.,க்களும் 32வது வார்டிற்கு வந்து இங்குள்ள குறைகளை தீர்க்க வழக்கறிஞர் செல்வம் தான் சரியான தேர்வு என மக்களிடம் உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து செல்வம் அபரிமிதமான வெற்றியை இன்று பதிவு செய்து, வார்டினை கைப்பற்றினார்.

Tags

Next Story
ai marketing future