தேனி நகராட்சியில் வெற்றி வாகை சூடியது திமுக

தேனி நகராட்சியில் வெற்றி வாகை சூடியது திமுக
X
தேனி மாவட்ட தலைநகரான, தேனி நகராட்சியில் தி.மு.க., கூட்டணி 21 இடங்களை கைப்பற்றி வெற்றி வாகை சூடி உள்ளது.

தேனி மாவட்ட தலைநகரான தேனி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. அறுதிப்பெரும்பான்மைக்கு 17வார்டுகளே போதுமானது. ஆனால் தி.மு.க., மட்டும் தனித்து 19 இடங்களை வென்றுள்ளது. காங்கிரஸ் இரண்டு இடங்களை வென்றுள்ளது. அ.தி.மு.க., ஏழு இடங்களையும், அ.ம.மு.க., இரண்டு இடங்களையும், பாரதீய ஜனதா கட்சி ஒரு இடத்தையும், சுயேட்சை ஒரு இடத்தையும் பெற்றுள்ளது.

தேனி நகராட்சியில் சேர்மன் வேட்பாளராக தி.மு.க., சார்பில் போட்டியிட்ட ரேணுப்பிரியா 10வது வார்டிலும், அவரது கணவர் பாலமுருகன் 20வது வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் தேனியில் நகராட்சி தலைவர் மற்றும் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு பிற கட்சிகளில் இருந்து போட்டி இல்லாத நிலை உருவாகி உள்ளது. ஆனால் தி.மு.க விற்குள் கடும் போட்டி நிலவுவதால் முடிவு மேலிடத்தின் கைகளுக்குள் சென்றுள்ளது என தி.மு.கவினர் தெரிவித்தனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி