கேரளத்துக்கு கனிம வளம் ஏற்றிச் செல்ல தடை: நாளை முதல் அமல்

கேரளத்துக்கு கனிம வளம் ஏற்றிச் செல்ல தடை: நாளை முதல் அமல்
X

பைல் படம்

நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார்

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக இடைவெளி இன்றி கனிம வளங்கள் தடையின்றி கனரக வாகனங்கள் மூலமாக கேரளாவிற்கு கொண்டுசெல்லப்பட்டன.

இந்த நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார்.

இந்தக் கட்டுப்பாடுகளை தொடர்ந்து, குறிப்பிட்ட வழித்தடங்களான ஆரல்வாய்மொழி, செண்பகராமன் புதூர், துவரங்காடு, காவல்கிணறு, தோவாளை, வெள்ளமடம், அப்டா மார்கெட், புத்தேரி, இறச்சகுளம், களியங்காடு வழியாக 10 சக்கரங்களுக்கு உள்பட்ட வாகனங்கள் மட்டுமே கனிமவளம் ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும்.

இந்தக் கட்டுப்பாடுகள் (செப்.15) முதல் அமலுக்கு வருகின்றன. இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், “கனிம வளங்கள் ஏற்றி செல்லும் கனரக வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் இந்த நடை முறைகளை தவறாது பின்பற்ற வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.மேலும், இந்த ஆணையை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!