தவறாக நடித்தேனா? நடிகை ரோஜா கண்ணீர்
ஆந்திரா அமைச்சர் நடிகை ரோஜா
தன்னை அவதூறு பரப்பு வகையில் பேசிய அரசியல் கட்சி தலைவருக்கு கண்டனம் தெரிவித்து நடிகை ரோஜா கண்ணீர் மல்க பேட்டி கொடுத்துள்ளார்.
நடிகையும், ஆந்திரப்பிரதேச மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான நடிகை ரோஜா மீது அவதூறு பரப்பும் விதமாக தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி பேசியுள்ளார்.அதாவது நடிகை ரோஜா ஆபாச படத்தில் நடித்ததாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.
இந்த விஷயம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்திற்காக அமைச்சர் ரோஜா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தனது கண்டனத்தை தெரிவித்து கண்ணீர் விட்டு அழுதார்.
அப்போது அவர் பேசுகையில், நான் நிர்வாண படத்தில் நடித்ததாக தெரிவித்து சித்ரவதை செய்து வருகிறார்கள். என்னைப் பற்றி மதிப்பிடுவதற்கு நீங்கள் யார்? தெலுங்கு தேசம் கட்சியினர் பெண்களை விளையாட்டுப்பொருளாக பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களின் மீது நான் மானநஷ்ட ஈடு வழக்கு போடப்போகிறேன். அரசியலை இவ்வுளவு கீழ்த்தரமாக பேச பயன்படுத்துகிறார்கள் என்று காட்டமாகத் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu