கோவையில் அண்ணாமலையின் வெற்றி நிலவரம் எப்படி?

கோவையில் அண்ணாமலையின்  வெற்றி நிலவரம் எப்படி?
X
கோவை தொகுதியில் சராசரியாக 12 லட்சம் வாக்குகள் பதிவாகின்றன.

பாஜகவுக்கு சுயபலத்துடன் சுமார் நாலு லட்சம் வாக்குகள் பதிவாகும் நிலையில், மும்முனை போட்டி என்பதால், வெற்றி பெற மேலும் ஒரு அறுபதாயிரம், எழுபதாயிரம் புதிய வாக்குகள் அவசியம். சரியான திட்டமிடல் மூலம் இது நிச்சயம் சாத்தியம். கோவை மக்களவை தொகுதி ஆறு சட்டசபை தொகுதிகளாக உள்ளது. கோவையை பொறுத்தவரை பாஜகவுக்கு நிச்சயமாக நல்ல முன்னேற்றம் உள்ளது. Traditional பாஜக வாக்காளர்களோடு சேர்ந்து, அண்ணாமலைக்காக வாக்களிக்கும் ஒரு கூட்டத்தை பல பகுதிகளில் பார்க்க முடிந்தது.

"சார் அண்ணாமலை இந்த அரசியல்வாதிகளை புரட்டி எடுக்கறாரு, அவருக்கு ஒரு சான்ஸ் கொடுத்து பார்க்கப் போறேன்" எனும் வாக்காளர்களை பல இடங்களில் பார்க்க முடிகிறது. அதே போல் அடிப்படைவாத திமுக வாக்காளர்களை தவிர பொது மக்களிடம் மோடி எதிர்ப்பு தற்போது அறவே இல்லை.

விடாமுயற்சி ஷூட்டிங்.... எப்ப ரீலீஸ் தெரியுமா?

Vote shift என்பார்களே அது பாஜகவுக்கு சாதகமாக மிக அதிகமாக உள்ளது. கடந்த முறை திமுகவுக்கு, அதிமுகவிற்கு வாக்களித்தவர்கள் மிகப்பலர் இம்முறை பாஜகவுக்கு வாக்களிக்கிறார்கள். ஆனால் ஒரே ஒரு இடத்தில் கூட பாஜகவுக்கு வாக்களித்தவர்கள் மாறி வாக்களிப்பதாக இல்லை. இந்த pattern எல்லா இடங்களிலும் இருப்பது தான் அதிசயம். "எல் முருகனுக்காக வாக்களிக்கிறீர்களா ?" என கேட்ட போது, இல்லை அண்ணாமலைக்கு என்றார்கள். அண்ணாமலைக்கு மிகப்பல புதிய பெண் வாக்காளர்களின் ஆதரவு இருப்பதை பார்க்க முடிகிறது.

அதிமுகவிற்கு கடந்த முறை வாக்களித்து தற்போது மாறுபவர்கள் சொல்லும் காரணம் "தலைமை இல்லை" என்பது. திமுகவிற்கு வாக்களித்து தற்போது மாறுவோர் சொல்வது "விலைவாசி உயர்வு, மின்சார கட்டணம், ஒரு சிலருக்கே ஆயிரம் ரூபாய், ஆகியவை.

இருமுறை உடைந்த மேடை...! ரோபோ வீட்டு கல்யாணத்தில் கலாட்டா..!

கோவை தெற்கிற்கு அடுத்து, கோவை வடக்கிலும், கவுண்டம்பாளையம், சூலூரின் பல பகுதிகளிலும் பாஜக செல்வாக்கு அதிகரிப்பதை பார்க்க முடிகிறது. சிங்கநல்லூர் பகுதியில் திமுகவின் கை சற்றே ஓங்கியிருக்கிறது. பல்லடம் பகுதியில் மட்டும் இதுவரை ஆய்வுகள் மேற்கொள்ளவில்லை. அதை மேற்கொண்டு விட்டால் தெளிவாக கூறிவிடலாம்.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் வசதிமிக்க மற்றும் நடுத்தர குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் செல்வாக்கு, இன்னும் C சென்டரில் போதிய அளவு பாஜகவுக்கு இல்லை. C சென்டர்களில் கடைசி நிமிட பண விநியோகமே வாக்குகளை நிர்ணயிக்குமோ என எண்ணத் தோன்றுகிறது. அதிமுகவும், திமுகவும் இந்த C சென்டர்களில் ஆளுமை செலுத்தினாலும், பாஜக இந்த பகுதியை விட்டு விலகிவில்லை. இங்கும் கூட பாஜக ஆதரவை பார்க்க முடிகிறது.

விடாமுயற்சி கார் விபத்து...! இதுதான் காரணமா?

கிறிஸ்தவர்களின் வாக்குகள் பெரும்பாலும் திமுகவிற்கும், சில இஸ்லாமிய வாக்குகள் அதிமுகவிற்கு பிரிவதையும் பார்க்க முடிகிறது. கொங்கு வேளாளர்களின் மிகப்பலர் பாஜகவுக்கு மாறியுள்ளனர். அதைப்போலவே கமலஹாசனுக்கு வாக்களித்த விஸ்வகர்மா சமூகத்தினர் பலர் அவர் திமுகவோடு இணைந்தது பிடிக்காமல் பாஜக வசம் வந்துள்ளது தெரிகிறது.

பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கும் பொது மக்கள் சொல்லும் காரணங்கள் 1) கேஸ் விலை 2) ஜி.எஸ்.டி உயர்வு. வியாபாரிகள், கடைக்காரர்கள் பலர் ஜி.எஸ்.டி. கெடுபிடிகள், 'இன்புட் கிரெடிட்' சிக்கல்கள் ஆகியவற்றை பிரதானமாக குறிப்பிடுகிறார்கள்.

கோவை தொகுதியை பொறுத்தவரை இது ஒரு கடுமையான மும்முனைப் போட்டி. அதிமுகவின் கோட்டையாக முன்பு இருந்து வந்தது அதன் பலம். திமுகவை பொறுத்தவரை தற்போது ஆளும்கட்சிக்கு எதிரான போக்கு காணப்பட்டாலும், சி செண்டர்களில் அதன் பலம் குறையவில்லை.

ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள், மருத்துவர்கள், உயரதிகாரிகள் என மிகப்பலர் பாஜகவுக்கு வாக்கு சேகரிப்பதை பார்க்க முடிகிறது. இவர்கள் புதிய புதிய யுக்திகளை எல்லாம் கையாள்வதை பார்க்க முடிகிறது. குக்கிராமங்கள் உட்பட பல சந்து பொந்துகளில் எல்லாம் கூட தாமரை சின்னம் ஜொலித்துக் கொண்டிருக்கிறது.

இரண்டு விவகாரத்தில் தான் முடிவுக்கு வரமுடியவில்லை. 1) அதிமுக, திமுக இருபாலரும் தேர்தல் களத்தில் micro level management-ல் வித்தகர்கள். 2) C சென்டர்களில் இவர்கள் இன்னும் கூட ஆளுமை செலுத்துகிறார்கள். பாஜகவை பொறுத்தவரை தங்கள் ஆதரவு வாக்காளர்களை அடையாளம் கண்டு, அவர்கள் வாக்களிக்கிறார்களா என்பதை ஊர்ஜிதப்படுத்துவது எல்லாம் மிக அவசியமானது.

அண்ணாமலை தமிழகத்தின் மற்ற பகுதிகளில் பிரச்சாரம் செய்வதை உடனடியாக நிறுத்திக் கொண்டு, கோவையில் கவனம் செலுத்துவது மிக மிக அவசியம். அவரின் அடுத்த இரு வார அதிரடி பிரச்சாரம் மிகப்பெரும் ஆதரவை மேலும் அதிகரிக்கும். ஏற்கனவே குறிப்பிட்டது போல் அண்ணாமலையின் வெற்றி பாஜக தொண்டர்களின் கனவு. அந்த கனவு மெய்பட வேண்டியது மிக மிக அவசியம்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!